பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்

பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்

for the devil has sinned from the beginning. (1John 3:8)

2Peter 2:4; Jude 1:6; Gensis 3:1-7; 1Timothy 2:14; John 13:2; 1Corinthians 7:5; 1Peter 5:8.

பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். (1 யோவான் 3:8)

2பேதுரு 2:4; யூதா 1:6; ஆதியாகமம் 3:17; 1தீமோத்தேயு 2:14; யோவான் 13:2; 1கொரிந்தியர் 7:5; 1பேதுரு 5:8.

ஆதிமுதல்.

தேவன் ஆதியிலே இருக்கிறார். ஆதியிலிருந்தே செயல்படுகிறார். தூதர்களும் அவருடைய ஆதி சிருஷ்டிப்பு ஆவர். அன்று முதல் தூதர்களும் கிரியை செய்து வருகிறார்கள். சாத்தானும் தேவனுக்கு விரோதமாக கிரியை செய்ய துவங்கிய போதே அந்தகார இருளில் தள்ளப்பட்டான். அன்றுமுதல் பிசாசானவன் தேவனுக்கு விரோதமாகவும், தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாகவும், தேவனுடைய எல்லா படைப்புகளுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகிறான். தேவனுடைய செயல்கள் யாவும் நல்லவைகளாகவும் சாத்தானின் செயல்கள் யாவும் பாவமாகவும் காணப்படுகிறது.

பரலோகத்தில் துவங்கிய அவனுடைய துர்கிரியைகள் இன்றுவரையிலும் தொடர்கின்றது. ஏதெனில் தனது பாவ செயல்களை ஆதிமனிதர்களில் நிறைவேற்றினான். அதில் அவன் வெற்றிக் கண்டதினால் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட இஸ்ராயேலரிடையிலும் பாவ கிரியைகளை செயல்படுத்தினான். தேவனால் கொடுக்கப்பட்ட நியாயபிரமாணத்துக்கு செவிகொடுப்பதைக்காட்டிலும் பிசாசின் கிரியைகளுக்கு இஸ்ராயேலர் அதிகமாக செவிகொடுத்தனர். பிசாசின் துர்கிரியைகளிலிருந்து இஸ்ராயேலரை மீட்பதற்கான விழிப்புணர்வை கொடுக்க தேவன் தீர்க்கதரிசிகளை எழுப்பினார். அவர்களை விரோதிக்கவும், எதிர்க்கவும், கொல்லவும் தக்கதாக இஸ்ராயேலரை பிசாசானவன் தூண்டி விட்டான். முடிவாக பாவ உலகில் வீழ்ந்துகிடக்கும் மனுகுலத்தை மீட்பதற்காக இஸ்ராயேலரிடையில் தேவன் தமது குமாரனை அனுப்பினார். இஸ்ராயேலரை தூண்டிவிட்டு அவரையும் கொலை செய்ய வைத்தான்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உருவாக்கப்பட்ட சபை பாவிகள் மத்தியில் வேரூன்ற ஆரம்பித்தது. கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை அது உருவான நாளிலிருந்து பிசாசானவன் எதிர்த்து வருகிறான். அவன் எதிர்க்கிறவனாக, சண்டைபண்ணுகிறவனாக, கொலை செய்கிறவனாக மட்டுமிராது துர் ஆலோசனைகளையும், துர் நடக்கைகளையும், துர் சிந்தைகளையும் கொடுத்து சபையை கெடுப்பதுதான் அதிகமாக காணப்படுகின்றது. பிசாசின் ஆலோசனைகளை சபைகளுக்குள் தத்துவ இயல் மூலமாகவும், விகர்ப்பமான இறையியல் மூலமாகவும், உளவியல் மூலமாகவும் பரவவிட்டு கிறிஸ்துவை விட்டு தூரப்படுத்துகிறான்.

பிசாசானவன் தன்னை பின்பற்றிவரும் பெருங்கூட்டத்தை கொண்டு பாவங்களை பெருகப்பண்ணுகிறான். அவர்களின் செயல்கள் நல்லவைகளைபோல காணப்பட்டாலும் அவைகள் துர்கிரியைகளே. விபசாரம் சார்ந்த பாவங்கள், பொருளாசை சார்ந்த பாவங்கள், பதவிகள் சார்ந்த பாவங்கள் போன்ற பலவிதமான பாவங்கள் சமுகத்தில் பரவிக் கிடக்கின்றன. இதனால்தான் யோவான் ஆக்கியோன் உலகமெல்லாம் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது என்று கூறுகின்றார்.

பிசாசானவனில் நன்மை வாசமாயிராததினால் அவனை பின்பற்றுகிறவர்களிலும் நனமை வாசமாயிருப்பதில்லை. இதனால் தேவனுடைய மக்கள் கட்சி, ஜாதி, மொழி, கலாச்சாரம் போன்றவைகளில் பங்களிப்பை கொடாதிருப்பது நல்லது.

கேள்வி. ஆதிமுதல் பாவம் செய்து வரும் பிசாசை தடுத்து நிறுத்தும் தேவனுடைய ஆயுதங்கள் எவை?.

அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே. ரோமர் 3:10-18.

ADD YOUR COMMENT

Powered By Indic IME