பாவிகளை

பாவிகளை மீட்க கிறிஸ்து உலகில் வந்தார்.

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான். (1 தீமோத்தேயு 1:15)

மத்தேயு 1:21; மத்தேயு 9:13; மாற்கு 2:17; லூக்கா 5:32; லூக்கா 19:10; யோவான் 1:29; யோவான் 3:16,17; யோவான் 12:47; ரோமர் 3:25,26; 1 யோவான் 3:5,8; 1 யோவான் 4:9,10.

ஜென்ம பாவம் உண்டு.
கர்ம பாவமும் உண்டு.

மரணத்துக்கு ஏதுவான பாவமும் உண்டு.
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமும் உண்டு.

பாவத்துக்கு சம்பளமும் உண்டு.
பாவத்துக்கு பரிகாரமும் உண்டு.

பாவம் செய்து பாவிகளானவர்களும் உண்டு.

பாவிகளாக்கப்பட்டு பாவிகளானவர்களும் உண்டு.

பாவிகளாய் பிறந்து பாவிகளானவர்களும் உண்டு.

பாவத்திலே மரித்தவர்களும் உண்டு.
பாவத்திற்கு மரித்தவர்களும் உண்டு.
பாவத்திற்காக மரித்தவர்களும் உண்டு.

பாவம் பெருகினாலும் கிருபையும்பெருகுகிறது.

அந்த கிருபையே இயேசு கிறிஸ்து.
அவர் பாவியை இரட்சிக்க வந்தார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME