நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்

நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்

 I said to you that you will die in your sins; for if you do not believe that I am He, you will die in your sins. (John 8:24)

Jn3:18,36; Mk16:16; Act4:12; Heb2:3,4; Heb10:26-29; Heb12:24,25; Pr8:36; Ez3:18; Ez18:33:9.

 ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
(யோவான் 8:24) 

யோவான் 3:18,36; மாற்கு 16:16; அப்போஸ்தலர் 4:12; எபிரெயர் 2:3,4; எபிரெயர் 10:26-29; எபிரெயர் 12:24,25; நீதிமொழிகள் 8:36; எசேக்கியேல் 3:18; எசேக்கியேல் 18:33:9. ரோமர் 14:23.

விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே. இயேசுவை கர்த்தர் என்று விசுவாசிக்க யூதர்களுக்கு பொன்னான ஒரு நேரடி வாய்ப்பு கிடைத்தது. அப்படி கிடைத்திருந்தும் அவர்கள் இயேசுவை மேசியா என்றும், கர்த்தர் என்றும், ஆண்டவர் என்றும், மீட்பர் என்றும், இரட்சகர் என்றும் நம்பவில்லை. இவர்கள் வழிவந்த சீஷர்களும் இயேசுவின் உயிர்த்தெழுதல் வரை அரைகுறை விசுவாசமே கொண்டிருந்தனர். தோமாவும் அப்படியே காணப்பட்டார். என்றாலும் தன் விசுவாசத்தை என் ஆண்டவரே, என் தேவனே என்று கூறி அறிக்கையிட்டான்.
மாம்சத்தில் வந்த இயேசுவை கர்த்தர் என்றும் தேவன் என்றும் அறிக்கையிடாத எவரும் அந்திகிறிஸ்துவை உடையவர்களே. 1யோவான் 4:3.
நியாயபிரமாணம் செய்யக்கூடாததை செய்யும்படிக்கு தேவனால் கொண்டுவரப்பட்ட ஒன்றுதான் விசுவாசம். நியாயபிரமாணத்தினால் தப்பி பிழைக்க வழியற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டதே விசுவாசம். இதனால் இதனை வரங்களில் ஒன்றாகவும், தேவனே கொடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 1கொரிந்தியர் 12:9; எபிரெயர் 12:1.
பாவங்கள் நீக்கப்படவே நியாயபிரமானம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பிரமாணமே யாவருக்குள்ளும் இருந்த பாவகுறைகளை வெளிச்சமாக்கி மேலும் பாவியாக்கியது. எனவே தேவன் விசுவாசத்தை கொண்டு பாவங்கள் மன்னிக்கப்பட விரும்பினார். இந்த விசுவாசம் தேவன் மேலிருக்கவும், கிறிஸ்து மேலிருக்கவும் வேண்டும். யோவாான் 14:1.
தேவனை விசுவாசிப்பவன் எவனும் அவரால் அனுப்பப்பட்ட அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவையும் விசுவாசிக்க வேண்டும். இந்த விசுவாசமே பாவங்கள் நீக்கப்பட காரணமாகின்றது.
இயேசுகிறிஸ்து தன்னை பலியாக கொடுத்து மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கிறார். அவருடைய இரத்தமே என் பாவங்களை கழுவி தூய்மையாக்கும் என்று விசுவாசிக்கிறோம். இதுவே நம் பாவங்கள் நீங்கிபோக காரணமாகின்றது.
இனி கிறிஸ்தவ வாழ்வின் முழுமைக்கும் அவரையே நம்ப வேண்டும். எல்லாம் அவராலே வரும். இந்த விசுவாசம் குறைபடுமானால் பாவங்கள் உண்டாகும். பாவம் பூரணமாகும்போது மரணத்தை பிறப்பிக்கும்.

கர்த்தாவே உம்மையும், உம் மகனையும் நம்பி விசுவாசத்தில் வளர்ந்து பாவங்கள் கழுவபட்டு தூய்மையாக்கப்பட எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME