பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்பு இயேசு பெத்தானியா வந்தார்.
six days before the Passover, Jesus came to Bethany. (John 12:1)
Exo12:1-20; Deu16:1-8; 2Chr30:1-23; Ezra6:19-22.
பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். (யோவான் 12 :1)
யாத்திராகமம் 12:1-20; உபாகமம் 16:1-8; 2நாளாகமம் 30:1-23; எஸ்றா 6:19-22.
பஸ்கா பண்டிகை. Passover.
இது யூதர்களின் பண்டிகை. யோவான் 12:1 ல் இயேசுகிறிஸ்து கலந்துகொண்டது கிமு 2448 ல் இஸ்ராயேலர் எகிப்தில் வைத்து கொண்டாடிய மிக முக்கிய பண்டிகையாகும். இந்த பண்டிகையின் அடிப்படையில்தான் இஸ்ராயேல் நாடு உருவாக்கப்பட்டது. இஸ்ராயேலரின் வாழ்வின், சமயத்தின், சமூகத்தின் மையமே பஸ்கா பண்டிகையாகும்.
ஒரு ஜீவன் பல ஜீவன்களின் வாழ்வுக்காகப் பலியாக்கப்பட்டது பஸ்கா.
தேவனுடைய ஜனத்தை அடிமைபடுத்த நினைத்திருந்த எகிப்திய அடிமைதனத்தை உடைக்கும்படியாய் தேவன் எகிப்தியரின் நாட்டினூடே கடந்துபோனது பஸ்கா.
நீண்டயுக அடிமைதனத்திலிருந்து மிகப்பெரிய விடுதலைவெற்றியை அடைந்ததை மையமாக கொண்டிருப்பதுவே பஸ்கா.
மோசேயின் குடும்பத்தின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு முன்னேறி பாலும் தேனும் ஓடுகிற கானானைச் சுதந்தரித்துக் கொண்டதின் மையமே பஸ்கா.
பாரம்பரியம் என்று முத்திரை குத்தினாலும் தேவனின் பலத்த கிரியையும், ஓங்கிய புயத்தையும் வெளிப்படுத்தியது பஸ்கா.
தேவனுடைய ஜனத்தை அழிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் வருடந்தோறும் கொண்டாடப்படும் இப்பண்டிகையானது எதிராளியின் அழிவை நினைவுகூர்தலாக வெளிப்படுத்துவது பஸ்கா.
ஆட்டை பலியிட்டு அதன் இரத்தத்தை மீட்பின் பொருளாக கருதிய நிகழ்வானது இயேசுகிறிஸ்துவின் பலியிடப்படுதலையும், அவரின் இரத்தம் மீட்கும் பொருளாவதையும் நினைவுபடுத்துவது பஸ்கா.
பஸ்கா யூதர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவாய் இயேசுவின் மரணம் கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமானதாகும். பஸ்காவில் மரணமும் விடுதலையும் மட்டுமே காணப்பட்டது. கிறிஸ்துவின் மரணத்திலோ மரணமும், உயிர்ப்பும் விடுதலையும் இணைந்து காணப்படுகிறது. எனவே பஸ்காவை நாம் கொண்டாடுகிறோமோ இல்லையோ இயேசுவின் இறப்பையும், உயிர்ப்பையும் நாம் மிகைப்படுத்திதானாக வேண்டும்.
பஸ்கா ஆட்டின் மரணத்தை நாம் பெரிதுபடுத்தாமல் இருக்கலாம். ஆனால் இரட்சகராகிய இயேசுவின் மரணத்தை களிகூருதலாக கொண்டாட இயலாது. ஏனெனில் அவர் எனக்காய் பாடுபட்டார், எனக்காய் மரித்தார், எனக்காய் உயிர்ப்பிக்கப்பட்டார், எனக்காய் வரப்போகிறார். அவர் பட்ட வேதனையை என் வேதனையாகவும், அவர் அடைந்த வெற்றியை என் வெற்றியாகவும் நான் கருதுகின்றேன். வலியினூடேதான் வழி உண்டாகும்.
ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன் மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17.