பரிசுத்த ஆவியின் அவசியம்

பரிசுத்த ஆவியின் அவசியம்

தியானபாடம் : யோவான் 3:31-36.

தியான வசனம் யோவான் 3:34, அப்போஸ்தலர் 1:8.

இயேசுகிறிஸ்துவில் பரிசுத்த ஆவியர் இருந்தார்.
தேவன் தமது ஆவியை அளவில்லாமல் அவருக்கு கொடுத்திருந்தார்.
பரிசுத்த ஆவி அவரில் இருந்ததினால்.

1. அற்புதங்களை செய்தார்.
2. பரலோக செய்தியை பேசினார்.
3. தேவனோடு நல் உறவில் நிலைத்திருந்தார்.
4. சாத்தானை – பாவத்தை – தீமையை எதிர்த்து நின்றார்.
5. சிலுவையை சுமக்க முடிந்தது.
6. எதிராளைகளின் துர்கிரியைகளை சகிக்க முடிந்தது.
7. பாடுகளை சகிக்க முடிந்தது.
8. மரணத்தை சந்திக்க முடிந்தது.
9. மரித்தபின்பும் உயிர்த்து பிதாவோடு இருப்பேன் என்ற தைரியம் கொண்டிருக்க முடிந்தது.

இன்னும் பல….
ஒரு மனிதன் இரட்சிக்கபட்டு இயேசுவின் நாமத்தில் திருமுழுக்கு எடுக்கும்போது பரலோக வாசலுக்கு நேராக பயணிக்கின்றான். அந்த பயணத்தில் ஆவியானவர் கூட இருந்து நடத்துகிறார்….
பின்மாறும்போது அவன் நரக வாசலுக்கு நேராக பயணிக்கின்றான். அவனோடு பிசாசின் ஆவி கூட இருந்து நடத்துகின்றான்.

எனவே நாம் விசுவாசிகளாகும்போது பரிசுத்த ஆவிய பெற்றுகொள்ள கர்த்தர் நம்மை கட்டாய படுத்துகின்றார்.

இந்த பரிசுத்த ஆவி நம்மில் இருப்பாரானால்.

1. எல்லாவற்றையும் செய்ய பெலன் கிடைக்கும்.
பவுல் இதனை பிலிப்பியர் 4:13 ல் கூறுகின்றார்.
எப்படி இந்த அனுபவத்தை பெற்றார்?. இதனை கலாத்தியர் 2:20 ல் தெளிவுபட கூறுகின்றார்.
நாம் உழைக்க, பிழைக்க, நற்கிரியைகளை செய்ய பெலன் உண்டாகின்றது.
ஆனால் சுவிசேஷம் சொல்ல 2 மைல் தூரம் நடக்க நமக்கு பெலன் இல்லை. காரணம் நம்மில் நாம் உலகத்தின் ஆவியை வைத்துள்ளோம்.
இந்த உலகத்தின் ஆவியை விரட்டி பரிசுத்த ஆவியை பெற்று வீரதீரமாய் செயல்படுவோம்.

2. நாம் ஜெயிக்க முடியும்.
1 யோவான் 5:4 ல் தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கமுடியும் என்று யோவான் கூறுகின்றார்.
பவுல் 2கொரிந்தியர் 2:14 ல் கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்க பண்ணுகிறார் என்கிறார்.
பாவத்தை – சாத்தானை – உலகத்தை – மாம்சத்தை சாத்தானின் கிரியைகளை – மனிதர்களின் சதிகளை நாம் ஜெயிக்க முடியும்.
தாவீது, உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன் என்கிறார்.
ஏனெனில் தாவீது தேவ ஆவியால் நிரப்பபட்டிருந்தார்.
நாமோ முடியலை, முடியலை என்கிறோம். காரணம் நாம் பலவீனத்தின் ஆவியால் நிரப்பபட்டுள்ளோம். இதிலிருந்து விடுபட்டு பரிசுத்த ஆவியை பெற்று கொள்வோம்.

3. நாம் உயர்வடைய முடியும். யாக்கோபு 4:10. தாழ்மைபடும்போது உயர்வடைய முடியும் என்று யாக்கோபு கூறுகின்றார்.
இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியை பெற்று தாழ்மையுடையவராய் இருந்து உன்னதம் வரையிலும் உயர்ந்தார். பிலிப்பியர் 2:5 – 11; எபேசியர் 2:6,7.
நாம் நம்மையல்ல, அவர் நம்மை உயர்த்தவேண்டும். இதற்கு பரிசுத்த ஆவி அவசியம். நாம் முன்வர தயங்குவதற்கு காரணம் நம்மில் தாழ்வு மனப்பான்மையின் ஆவி இருப்பதால். இன்று இந்த ஆவியை விரட்டி தேவன் நமக்கு தந்துள்ள பெலமும், தெளிந்த புத்தியுள்ள ஆவியை பெற்று கொள்வோம்.

ஜெபம்…
கர்த்தாவே, நாங்கள் உலகத்தின் ஆவியையும், பெலவீனத்தின் ஆவியையும், தாழ்வு மனப்பான்மையின் ஆவியையும் கொண்டிருந்திருப்போமானால் இன்றைக்கே அவைகளை எங்களை விட்டு விலக்கி எங்களில் உம் பரிசுத்த ஆவியை ஊற்றும் படியாய் வேண்டுகின்றோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME