நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
you have an anointing from the Holy One, and you know all things. (1John 2:20)
1John 2:27; 1John 4:13; Luke 4:18; John 10:4,5; John 14:26; John 16:13; Acts 10:38; 1Corinthians 2:15; 2Corinthians 1:21,22; Hebrews 1:9; Hebrews 8:11.
நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். (1 யோவான் 2:20)
1யோவான் 2:27; 1யோவான் 4:13; லூக்கா 4:18; யோவான் 10:4,5; யோவான் 14:26; யோவான் 16:13; அப்போஸ்தலர் 10:38; 1கொரிந்தியர் 2:15; 2கொரிந்தியர் 1:21,22; எபிரெயர் 1:9; எபிரெயர் 8:11.
அபிஷேகம் – அறிவு:
கர்த்தருடைய வார்த்தைகளைக, கேட்டு விசுவாசித்து இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாக மாறியவர்களில் பரிசுத்தராகிய தேவன் தமது ஆவியை கொண்டு இரண்டு காரியங்களை செய்கிறார். ஒன்று அவனை அபிஷேகிக்கிறார், இன்னொன்று அவனது இருதயத்தை தமது ஆவியினால் நிரப்புகிறார். இவ்விதம் அபிஷேகம் பெற்று ஆவியினால் நிரப்பப்பட்டவன் ஆவியினால் நடத்தப்படுகிறவனாகவும், ஆவியினால் கற்பிக்கப்படுகிறவனாகவும் இருக்கிறான். அவனை ஒருவரும் தங்களிஷ்டபடி நடத்தவும் முடியாது, அவனை உலக அறிவுகளினாலும், பொய்யாய் ஞானமென்று பெயர் பெற்றிருக்கிறவைகளினாலும் கற்பிக்கவும் முடியாது.
அபிஷேகம் என்பது நியமனம் செய்யப்படுதலாகும். தேவனுடைய பணியினை செய்யவோ, தேவனுக்காய் வைராக்கியமாய் நிற்கவோ, தேவனுக்குரியவைகளை சுமந்து செல்லவோ நியமிக்கப்படுகின்றான். நியமனம் செய்யப்படுதல் இருவிதங்களில் நடத்துவிக்கப்படுகின்றது. ஒன்று பயன்படுத்திவிட்டு தள்ளிவிடுதலுக்கானது. இன்னொன்று தொடர்ந்து தன்னிடமாய் தமக்காக வைத்துக் கொள்வதற்கானது. கோரேஸ் போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டு தள்ளிவைக்கப்பட்டார்கள். தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், இராஜாக்கள், ஊழியர்கள் இரண்டாம் வகையினராக இருக்கிறார்கள். நாம் நம்மில் உள்ள அபிஷேகத்தைக் குறித்து அறியாதிருப்போமானால் ஆபத்தாக முடியும்.
இப்பகுதியில் அபிஷேகமும் அறிவும் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. தேவன் நம்மை அபிஷேகித்திருப்பாரென்றால் அவர் நமக்கு கற்றுகொடுக்கவும் செய்கின்றார். கற்றுக்கொள்வதினால்தான் நாம் அறிவடைகின்றோம். தேவனையும், அவருடைய ஆழங்களையும், அவருடைய கிரியைகளையும், அவருடைய வாக்கியங்களையும் அறிகின்றோம். நாம் அறிவடையும்படியாக தேவன் முதலாவது ஆவியானவரையும், இரண்டாவது விவிலியத்தையும், மூன்றாவதாக தனக்கு முன் ஓடின தேவ மனிதர்களையும் வைத்துள்ளார். இந்த மூன்றும் அவர் கொடுத்துள்ள அபிஷேகத்துக்குட்பட்டதேயாகும். ஆவியானவரையும் விவிலியத்தையும் பிடித்துக்கொண்டு தேவ மனிதர்களை புறந்தள்ளுகிற ஆவிகள்தேவனுடைய ஆவியாக இருக்க வாய்ப்பில்லை. நாம் அவரால் நியமிக்கப்பட்டுள்ளோம். மூன்று இடங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளோம். கற்பது கற்பிப்பதற்காகவே.
கேள்வி..
ஆவியானவர் சொல்லுகிறார் என்று சொல்லுகிற செய்திகள் விவிலியத்துக்கும் முன்னோடின ஊழியர்களின் செய்திகளுக்கும் முரண்பட்டிருக்க காரணம் என்ன?
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. யாக்கோபு 3:13-18.