பரலோகிலிருந்திறங்கினவர், பரலோகிலிருக்கிறவர், பரலோகத்துக்கேறினவர்.

பரலோகிலிருந்திறங்கினவர், பரலோகிலிருக்கிறவர், பரலோகத்துக்கேறினவர்.

No one has ascended to heaven,came down from heaven,is in heaven except Jesus. (John 3:13)
Mk16:19,20; Jn6:33,38,46,51,62; Jn8:42; Jn13:3; Jn16:28=30; Act2:24-36; Ro10:6-8; 1Cor15:47; Ep1:23; Ep4:8-10.

பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)

மாற்கு 16:19,20; யோவான் 6:33,38,46,51,62; யோவான் 8:42; யோவான் 13:3; யோவான் 16:28-30; அப்போஸ்தலர் 2:24-36; ரோமர் 10:6-8; 1கொரிந்தியர் 15:47; எபேசியர் 1:23; எபேசியர் 4:8-10.

இயேசுகிறிஸ்து…
1.பரலோகத்திலிருந்திறங்கினவர்.
மனிதரின் மீட்புக்காக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு பூமிக்கு அனுப்பபட்டவர். பூமிக்குரிய உன்னத வாழ்வை பிரதிபலித்தவர். மாம்சத்தில் வெளிப்பட்டவர். மீட்பை சம்பாதித்தவர்.

2. பரலோகத்துக்கேறினவர்.
மரித்த இயேசு தேவனால் உயிர்ப்பிக்கப்பட்டு பரலோகத்துக்கு உயர்த்தப்பட்டவர். இது இயேசுவின் பரமேறுதலை குறிக்கின்றது. முன்னிருந்த இடத்திற்கு ஏறிச் சென்றவர். மனிதர்க்கு வரங்களை கொடுக்க ஏறிச் சென்றார்.

3. பரலோகத்திலிருக்கிறவர்.
பிதாவின் மடியிலே உட்கார்ந்திருக்கிறவர். தம் ஜனங்களுக்காக மன்றாடிக்கொண்டிருக்கிறவர். பிதாவின் மடியில் இருப்பதினால் தேவ குமாரன் எனப்படுகிறவர்.

ஒருவனுமில்லை, முக்தியடைந்தவனும், நிஷ்டையிலிருப்பவனும் இந்த நியமங்களுக்குள் வரவியலாது.

வானத்துக்கு ஏற துடித்த சாத்தான் கீழே தள்ளப்பட்டான். நரகில் அடைக்கபடுவான்.

ஆனால், இந்த இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்போர் அவரோடுகூட உன்னதங்களிலே ஏறிச்சென்று உட்கார முடியும்.

பிதாவின் அருள் பெற்றவர்களே அவரோடு பரலோகிற்கு ஏற முடியும். புதிய பூமியில் இறங்கிவர முடியும்.

கர்த்தாவே, எங்களுக்காய் இறங்கினீர், மரித்தீர், அடக்கம்பண்ணப்பட்டீர், உயிர்த்தெழுந்தீர்,ஏறிச்சென்றீர், திரும்பி வரப்போகின்றீர். கள்வனை நீர் அழைத்துச் சென்றதுபோல பாவத்திலிருந்து உம் இரத்தத்தால் மீட்கபட்ட என்னையும் உம்மண்டை அழைத்துச் செல்ல என்மேல் நோக்கமாயிரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME