நீ மனுஷனாயிருக்க உன்னைத் தேவன் என்று சொல்லுவதினால் கல்லெறிகிறோம்

நீ மனுஷனாயிருக்க உன்னைத் தேவன் என்று சொல்லுவதினால் கல்லெறிகிறோம்.

for blasphemy,and because You,being a Man,make Yourself God.(John 10:33)

Mt9:3; Mt26:65; Mk2:7; Mk14:6; Lk5:21; Jn8:53; Rom13:1; Phil2:6; Lev24:14,16; 1Kin21:10; Pr26:28.

யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை, நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். (யோவான் 10:33)

மத்தேயு 9:3; மத்தேயு 26:65; மாற்கு 2:7; மாற்கு 14:6; லூக்கா 5:21; யோவான் 8:53; ரோமர் 13:1; பிலிப்பியர் 2:6; லேவியராகமம் 24:14,16; 1இராஜாக்கள் 21:10; நீதிமொழிகள் 26:28.

தேவ தூஷணம்:
தேவ தூஷணம் என்ற சொல்லுக்கு மனிதர்களின் நற்பெயருக்கோ, தேவனின் நற்பெயருக்கோ அவகீர்த்தி உண்டாக்குவதையே குறிக்கிறதாயுள்ளது. இயேசுகிறிஸ்து தன்னையும் பிதாவையும் ஒன்றாயிருப்பதாக கூறியதை தவறாக புரிந்துக்கொண்ட யூதர்கள் இவ்விதமாய் அவருக்கு எதிராக எழும்பி குற்றம் சாட்டினர். எனவே நாம் யூதர்களின் புரிந்துகொள்ளுதலை நாம் கவனிக்க வேண்டும்.

இயேசுகிறிஸ்து ஒரு மனிதனே. யூதசமயத்திலே யூதனாக பிறந்து ரபீயாக உயர்வு பெற்ற ஒரு மனிதனே. எல்லா மனிதர்களை போலவும் இயேசுவுக்கும் மனித குறைபாடுகளும், நிறைகளும் உண்டு. மனிதனாக பிறந்து மனிதனாக பாடுகளைபட்டு மனிதனாக மரணிக்க போகிறவர்தான் இயேசு கிறிஸ்து என்றனர்.

தேவன் மனிதனல்ல, மனிதனை படைத்தவர். தன்னிலிருந்து மனிதனை பிறப்பித்தவர் அல்ல. மனிதனை படைத்து அவனை தன் வழியிலே தன் கட்டளைபிரகாரம் நடத்துகிறவர். மனிதர் அவருக்கு ஆலோசனை சொல்லவோ, வழிகாட்டவோ இயலாது. ஆக்குபவரும், அழிப்பவரும் அவரே என்றனர்.

மனிதனாயிருக்கிறவன் தன்னை தேவனென்று சொல்ல இயலாது. ஆதாம் முதல் யோவான் வரையிலும் ஏராளமான பரிசுத்தவான்கள், தீர்க்கதரிசிகள், மூதாதையர்கள் தோன்றியிருந்தாலும் எல்லாரும் மனிதர்களாகவே கருதப்படுகின்றனர். மோசேயும் ஒரு மனிதரே. இவர்களில் ஒருவரும் தங்களை தேவன் என்று சொல்லாதிருக்க மனிதனாக பிறந்து பூமியில் வாழும் இயேசு மட்டும் தன்னை தேவன் என்று எப்படிகூறிக்கொள்ளலாம் என்றனர்.

இது யூதர்களின் ஆதங்கமாகும். இயேசு மனிதனாக பூமியில் வந்திருந்தாலும் அவர் தேவனோடிருந்தவர், தேவனால் அனுப்பப்பட்டவர், தேவ குமாரனாக அறியப்பட்டவர்.

யாவரும் வெறுக்கின்ற சாத்தானுக்கே இயேசுவை தேவ குமாரனாகவும், தேவனாகவும் அறியும் அறிவிருந்தும் தேவனுடைய மக்களாகிய யூதர்களுக்கு இவ்வித அறிவு இல்லாதது வேதனையானது.

இன்றைக்கு இந்த யூதர்களைபோலவே இயேசு என் பாவங்களை மன்னித்து எனக்கு மீட்பு தரும்படியாக தேவ மகனாக வந்து சிலுவையிலே மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து மீண்டும் வரப்போகிறார் என்று நம்புவதற்கு திராணியற்ற தேவ மக்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்களுக்கு இனி சிலுவையல்ல, சிங்காசனமே காண்பிக்கப்படும். சிலுவையிலிருந்து அன்பு பரிணமித்தது என்றால் சிங்காசனத்திலிருந்து கோபாக்கினை பரிணமிக்கும்.நீ மனுஷனாயிருக்க உன்னைத் தேவன் என்று சொல்லுவதினால் கல்லெறிகிறோம்.

கர்த்தாவே உம் மகனை நாங்கள் நன்றாய் அறியும்படிக்கு வெளியரங்கமாய் இவ்வுலகிற்கு அனுப்பினீர். நாங்கள் அவரை மெய்யாய் விசுவாசித்து வீடுபேறடைய விருப்பமுள்ளவர்களாய் இருக்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME