நீ தேவனை மகிமைப்படுத்து, இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்

நீ தேவனை மகிமைப்படுத்து, இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்

Give God the glory! We know that this Man is a sinner. (John 9:24)

Jn9:16; Jn8:46; Jn14:30; Jn18:30; Jn19:6; Mt11:19; Mk15:28; Lk7:39; Lk15:2; Lk19:7; Rom8:3; 2Cor5:21.

ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து, இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
( யோவான் 9:24)

யோவான் 9:16; யோவான் 8:46; யோவான் 14:30; யோவான் 18:30; யோவான் 19:6; மத்தேயு 11:19; மாற்கு 15:28; லூக்கா 7:39; லூக்கா 15:2; லூக்கா 19:7; ரோமர் 8:3; 2கொரிந்தியர் 5:21.

இந்த மனுஷன் பாவி:
பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஒரு பாவி என்று தீர்ப்பிடுகிறார்கள். இயேசுகிறிஸ்து நியாயபிரமாணத்தின் சட்டத்தை மீறியதாகவும், ஓய்வுநாள் ஆசரிப்பை மீறியதாகவும் கருதி அவரை பாவி என்று கூறுகின்றார்கள். குற்றமில்லாதவரை

குற்றவாளியென்றும், நிரபராதியை குற்றவாளியென்றும், பரிசுத்தரை பாவி என்றும், தேவமகனை பாவத்தோடு இணைத்தும் கூறுவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவங்களாகவும் மாறக்கூடும்.

பாவம் தேவனிடமிருந்து வந்ததல்ல, அது சாத்தானிடமிருந்து வந்தது. இன்னும் விரிவாக கூறுமிடத்து பாவமானது தோன்றுகிற இடம் கீழ்படியாமை என்ற மேட்டுபுறம். எல்லா பாவங்களுக்கும் தோற்றுவாய் கீழ்படியாமையே. கீழ்படியாமை உள்ள இடத்தில் பாவம் குடி கொண்டிருக்கும். எனவே தான் அப்படிபட்டவர்களை பாவி என்று அழைக்கிறது விவிலியம்.

இயேசுகிறிஸ்து தேவனால் கொடுக்கப்பட்ட நியாயபிரமானத்துக்கு எதிராக காரியங்களைச் செய்ததாக கருதப்பட்டதினால் அவரை பாவி என்று கூறினார்கள். ஆனால் இயேசுகிறிஸ்து நியாயபிரமாணத்தை மீறவில்லை. ஓய்வுநாளில் நன்மை செய்வதுதான் பிரமாணத்தின் நோக்கம். தேவனை தொழுகை செய்ய இயலாத மனிதர்களுக்கு நன்மை செய்து அவர்களையும் தொழுகை செய்ய வைப்பதுவே தேவனுடைய விருப்பம். இயேசு நன்மை செய்தார். நன்மை செய்கிறவராய் சுற்றி திருந்தார். பிறருக்குரிய நன்மைகளை நாம் கொடுக்காமல் நாம் தேவனை தொழுகை செய்ய இயலாது.

இயேசு நன்மை செய்யாதிருந்தால் தேவனால் பாவியாக்கப்பட்டிருந்திருப்பார். அவர் நன்மை செய்ததினால் மனிதர்களால் பாவியாக்கப்பட்டார்.

நீயும் நன்மை செய்து பாடுகளை அனுபவிக்கிறாயானால் கவலை படாதே. கர்த்தர் உனக்கு துணை நிற்பார்.

கர்த்தாவே நீர் தூய்மையானவராயிருந்தும் உம்மை பாவியாக்க பாவத்திலே வாழும் மனுக்குலம் இன்ன்றும் முயற்சிக்கின்றது. ஆனாலும் நீரோ எல்லா நிலைகளிலும் தூய்மையானவராகே இருப்பதற்காய் ஸ்தோத்திரம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME