நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய்.
If you knew the gift of God, and you would have asked Him. (John 4:10)
Jn14:13,14; Jn15:7; Lk11:8-10,13,14; Lk23:42,43; Act9:11; 1Jn5:14,15; Rev3:17,18; 2Chr33:12,13; Ps10:17; Isa55:6;
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். (யோவான் 4:10)
யோவான் 14:13,14; யோவான் 15:7; லூக்11:8-10,13,14; லூக்கா 23:42,43; அப்போஸ்தலர் 9:11; 1 யோவான் 5:14,15; வெளி 3:17,18; 2நாளாகமம் 33:12,13; சங்கீதம் 10:17; ஏசாயா 55:6;
நீயே அவரிடம் கேள்:
ஆதியில் மனிதன் தேவனிடம் கேட்டு பெற்றுக்கொள்ளும்படியாக அல்ல, அவரே வலிய வந்து கொடுத்து மகிழ்விக்கும்படியான அனுபவம் காணப்பட்டது.
நன்மை – தீமை இன்னதென்று மனிதன் தன் சுய தெரிதல் என்ற பாவத்தை செய்ததிலிருந்து அவனுக்குரியவைகளை அவனே கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முறையை ஏற்படுத்தினார். அதுமுதல் நாம் கேட்டுத்தான் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், அவர் பரலோகத்திலிருக்கிறார். நாம் பூமியிலிருக்கிறோம். ஆகவே, அவர் நம்மை நோக்கி பார்க்குமட்டும் நம் கண்கள் இடைவிடாமல் சொரிந்து கொண்டேயிருக்க வேண்டியுள்ளது.
இரண்டுவிதமான கொடுப்பனைகளை தேவன் வைத்துள்ளார்:
பூமிக்குரியவைகளை எவர் வேண்டுமானாலும் அதற்குரிய முறைமைகளை பயன்படுத்தும்போது பெற்றுக்கொள்ளும்படி வைத்துள்ளார்.
இன்னொன்று ஆவிக்குரிய நன்மைகள். இவைகளை பெற ஆவிக்குரிய பயிற்சிமிகவும் அவசியம். இந்த பயிற்சிகளை நாம் சரிவர செய்யும்போதுதான் அவைகளை பெறமுடியும்.
சமாரிய பெண். கிணற்று நீரை பெற சற்று கஷ்டபட்டு முயற்சி செய்தால் பொதும். ஆனால், ஜீவ தண்ணீரை பெறவேண்டுமாயின் அவரிடம் கேட்டுத்தான் ஆக வேண்டும்.
உன் STATUS பார்ப்பாயானால்.
உன் கல்வியை பெரிதாக எண்ணுவாயானால்.
உன் வேலையை பெரிதாக நினைப்பாயானால்.
உன் நேர்மை, உழைப்பு யாவும் தேவனுக்குரியவைகளாக மாற்றபடவில்லையானால்.
தேவனுக்காக உன் நேரத்தை கொடுக்க முடியாவிட்டால்.
நீ அவரிடமிருந்து ஒன்றையும் பெறமுடியாது.
இப்பொழுதே ஆயத்தப்படு.
நேரம் ஒதுக்கு.
உன்னதரண்டை வா.
உன்னதரோடு பேசு.
உன்னை நன்மையால் நிரப்புவார்.
கர்த்தாவே, நீர் கொடுப்பவைகளை குறித்த நல்ல அறிவு எங்களுக்கு உள்ளது. ஆனால், நீர் கொடுப்பதை பெறக்கூடிய உழைப்பை கொடுக்க எங்களுக்கு நேரமில்லை. தேவரீர் எங்களை மன்னித்து உம்மோடு செலவிடும் நேரத்தை நாங்கள் ஆயத்தம் செய்ய உமது நல்ல ஆவியை எங்களுக்குள் ஊற்றாய் வர உதவி செய்யும்.