நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா? இல்லை.
You are not also one of this Man’s disciples, are you?. He said,I am not. (John 18:17)
Genesis 18:15; Matthew 26:33; Mark 14:30,69; Luke 22:55; John 13:38; John 20:6; John 21:16; Act 1:13; Act 4:13.
அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான். (யோவான் 18:17)
ஆதியாகமம் 18:15; மத்தேயு 26:33; மாற்கு 14:30,69; லூக்கா 22:55; யோவான் 13:38; யோவான் 20:6; யோவான் 21:16; அப்போஸ்தலர் 1:13; அப்போஸ்தலர் 4:13.
நீயே அவன்:
இயேசுவோடு மூன்றரை ஆண்டுகள் பயணித்து, உண்டு, உறங்கி வாழ்ந்தவர்கள் சீஷர்கள். அவரின் கோபம், சாந்தம், களைப்பு, பசி, பலவீனம் போன்ற குணநலன்களை அறிந்தவர்கள். அவரின் விருப்பம் என்ன, வெறுப்பு என்ன என்றெல்லாம் அறிந்தவர்கள். அவருடைய உபதேசம் யாவும் பிதாவாகிய தேவனிடமிருந்து வந்தது என்றும் அறிந்தவர்கள். அவரோடு இருக்க அழைக்கப்பட்டவர்கள் அவரைப் போலவே மாறிவிட்டார்கள். அவரைப் போலவே நடந்துக் கொண்டார்கள். அவரைப் போலவே பேசினார்கள். அவரைப் போலவே உடை உடுத்திக்கொண்டார்கள். இயேசுவையும், சீஷர்களையும் வித்தியாசம் அறியாவண்ணம் எல்லா சீஷர்களும் இயேசுவைப் போல மாறினர்.
இந்த மாற்றம் பேதுருவுக்கு பாடுகளையும், உபத்திரவங்களையும் கொண்டு வந்தது. பேதுருவை கண்டவர்கள் நீ இயேசுவின் சீஷன் என்று எளிதாக அறிந்துக் கொண்டனர். பேதுருவின் பேச்சும், செய்கையும், உடை அமைப்பும் அவனைக் கிறிஸ்துவின் சீஷன் என்று காட்டிக்கொடுத்தது. இதனால் நீயே அவன் என்று சொன்னார்கள். பேதுருவோ நான் அவனல்ல, அவரோடு சேர்ந்தவனல்ல, நான் வேறு ஒருவன் என்று கூற வைத்தது.
தேவனுடைய மனிதர்களாகிய நாமும் கூட இயேசுவோடு வாழ்ந்து, பயணித்து அவரிடமிருந்து கற்று, அனுபவித்து அவரைப் போலவே மாறிவிட்டோம். நமது நடை உடை பாவனை யாவும் இயேசுவைபெ போல மாறிவிட்டது. நமது பேச்சு, உபதேசம், செயற்பாடுகள் யாவும் அவரையே பிரதிபலிக்கின்றது. இதனால் நம்மை பார்க்கின்றவர்கள் இவன் இயேசுவின் கூட்டத்தான், ஆவி கூட்டத்தான், அல்லேலூயா கூட்டத்தான் என்று முத்திரைக் குத்தி கொள்கின்றனர்.
தங்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் கூட்டத்தினின்று தப்பித்துக் கொள்வதற்காக விதவிதமான உடை அணிந்து, சிகை அலங்காரம் செய்து, தலை நிறைய பூ வைத்து, பொட்டு வைத்தாலும், காவி கட்டினாலும் தவறில்லை என்று போதித்து, அந்நிய தெய்வங்களின் பெயர்களையே வைத்துக்கொண்டு அதையே பிடித்துக் கொண்டு உள்ளம் இயேசுவுக்கே, உடல் தமிழுக்கே, பண்பாட்டுக்கே என்று கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் மறுதலிக்கின்ற பக்க வழியாய் நுழைந்த போதகர்களின் பிடியிலிருந்து விடுபட்டு உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தோற்றத்தில் உலகத்தானாகவும், உள்ளத்தில் கிறிஸ்தவனாகவும் குந்தி குந்தி நடக்கும் கூட்டம். நீங்களோ அப்படிபட்டவர்களல்ல. இயேசுவை போல வாழ அழைக்கப்பட்டவர்கள்.
கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள். அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான். அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று. அப்போஸ்தலர் 11:21-26
ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. கொலோசேயர் 2:6-9.