நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனாயிருக்கிறான்

நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனாயிருக்கிறான்.

If you know that He is righteous, you know that everyone who practices righteousness is born of Him. (1John 2:29)

1John 3:9; 1John 4:7; 1John 5:1; John 1:13; 1John 3:3-5; 1John 3:7,10; Matthew 7:16-18; Acts 10:35; Titus 2:12-14; Jermiah 13:23; Philippians 4:8,9.

அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள். (1 யோவான் 2:29)

1யோவான் 3:9; 1யோவான் 4:7; 1யோவான் 5:1; யோவான் 1:13; 1யோவான் 3:3-5; 1யோவான் 3:7,10; மத்தேயு 7:16-18; அப்போஸ்தலர் 10:35; தீத்து 2:12-14; எரேமியா 13:23; பிலிப்பியர் 4:8,9.

நீதி செய்கிறவன்.

தேவன் நீதியுள்ளவர். தேவனுடைய நீதியை சுமந்து வந்ததினால் கிறிஸ்துவும் நீதியுள்ளவராயிருக்கிறார். கிறிஸ்துவின் நீதியை சுமந்து திரிகிறவனும் நீதி செய்கிறவனாகவும், தேவனால் பிறந்தவனாகவும் இருக்கிறான்.

தேவன் நீதியுள்ளவராயிருப்பதினால் அவர் நியாயம் செய்கிறார். நீதியின் தேவனை பிரியப்படுத்துகிறவராயிருப்பதினால் தேவனின் நீதி கிறிஸ்துவில் விளங்கியது. இயேசுகிறிஸ்து தேவனால் பிறந்து தேவ நீதியை வெளிப்படுத்துகிறவராயிருந்தார். தேவனுடைய நீதியை கொண்டிருந்ததினால்தான் உலகம் முழுவதும் பாவத்தில் கிடக்கிறது என்பதை அறிந்தார். ஆகையினால் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்றும், தேவனுடைய நீதியை செய்கிறவர்களாக மாற வேண்டும் என்றும் போதித்தார். அவருடைய போதனையை ஏற்றுக்கொண்டு இயேசுவை விசுவாசித்து அநீதிகளாகிய துன்மார்க்கத்தை தொலைத்து தேவனுடைய நீதியாக மாறினர். இவர்கள் தேவனால் பிறந்தவர்களாயினர். இவர்கள் நியாயங்களை செய்கிறவர்களாக காணப்பட்டனர்.

தேவனுடைய பிள்ளைகள் என்று அறியப்பட்டோர் தேவனை பிரியப்படுத்தும்படியாக நடந்துக்கொள்ள வேண்டும். எப்பொழுது ஒருவரில் தேவன் பிரியம் கொள்கிறாரோ அப்பொழுது அவர்கள் தேவனுடைய நீதியாக மாறுகிறார்கள். தேவனுடைய நீதியை கொண்டிருப்பவர்களே நீதிமான்களாகின்றனர். தேவனை பிரியப்படுத்தும்படியாக இயேசு கிறிஸ்து பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றினார். அவருக்கு பிரியமானவைகளை செய்ததினால் இயேசுவும் அவருக்கு பிரியமானவராக காணப்பட்டார். அதேபோல நாமும் தேவனை பிரியபடுத்தும்படியான நீதியுள்ள கீழ்படிதலை உடையவர்களாயிருக்க வேண்டும்.

தேவனுடைய நீதியாக அறியப்பட்டுள்ள தேவனுடைய மக்கள் தங்களில் விளங்கும் தேவனுடைய நீதி அழுக்கான கந்தையாகாதபடிக்கு சொல்லிலும், செயலிலும், வாழ்விலும், தாழ்விலும் யோக்கியர்களாக நடந்துக்கொள்ள வேண்டும். வெளிச்சத்துக்குரியவைகள் மட்டுமே நீதிக்குரியவைகளாகும். நற்கிரியைகளும் நீதியை வெளிப்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக தூய்மையான வாழ்க்கையே தேவனுடைய நீதியை வெளிப்படுத்தும் சிறந்த தளமாகும். நமது சொல்லும், நமது கிரியைகளும் மாறுபட்டிருக்குமானால் மாய்மால வாழ்க்கையாகவே காணப்படும். அவரின் அபிஷேகம் தங்களில் இருக்கிறது என்பதை நினைவுகூருவதே தூய்மையான வாழ்வு வாழ்வதற்கான அடித்தளமாகும். அவர் என்னை ஊழியக்கரானாக நியமனம் செய்திருக்கிறார் என்ற உணர்வே என்னை செம்மையான வழியிலே நடத்தும். நான் அவரை விசுவாசிக்கும் உண்மையுள்ள விசுவாசி என்ற சிந்தனையே என்னை நேர்வழி நடத்தும். என்னை அவரின் மந்தையின் மூப்பனாக வைத்திருக்கிறார் என்ற உணர்வே என்னை சகல நல்லொழுக்கங்களிலும் நடத்தும்.

அவர் நீதியுள்ளவர். நாமும் நீதியுள்ளவர்களாயிருப்போம்.

கேள்வி. அவர் என்னில் செய்ததையும், என்னை கொண்டு செய்வதையும் மறப்பதுதான் சகல பாவங்களுக்கும் காரணமோ?.

இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும். பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும், சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும், கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும், அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம். 2கொரிந்தியர் 6:3-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME