நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்று அறிவீர்கள்.
When you lift up the Son of Man, then you will know that I am He. (John 8:28)
Jn3:14,15; Jn4:42; Jn12:32-36; Jn19:18; 1Thes2:15,16; Jn5:19,30; Jn6:38; Jn11:42; Jn12:49,50; Jn14:10,24; Jn17:7; 1Jn1:1,2; 1Jn5:20.
ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். (யோவான் 8:28)
யோவான் 3:14,15; யோவான் 4:42; யோவான் 12:32-36; யோவான் 19:18; 1தெசலோனிக்கேயர் 2:15,16; யோவான் 5:19,30; யோவான் 6:38; யோவான் 11:42; யோவான் 12:49,50; யோவான் 14:10,24; யோவான் 17:7; 1யோவான் 1:1,2; 1யோவான் 5:20.
மனுஷகுமாரன் உயர்த்தபடல்:
இயேசுகிறிஸ்து தான் சிலுவையில் உயர்த்தபடுதலை குறித்தே பேசுகிறார். யூதர்களாகிய நீங்கள் மனுஷகுமாரனாகிய என்னை சிலுவையில் தொங்க விடுவீர்கள். வானத்துக்கும் பூமிக்கும் நடுவாக உயர்த்தி வைப்பீர்கள் என்று தம் சிலுவை மரணத்தைக் குறிப்பிடுகின்றார்.
வெண்கல சர்ப்பம் உயர்த்தி வைக்கப்பட்டதுபோல மனுஷகுமாரனாகிய தானும் உயர்த்தி வைக்கப்படுவேன் என்றார்.
என்னை குற்றவாளியாக உயர்த்தி வைப்பீர்கள். ஆனால் அனேகர் என் உயர்த்தப்படுதலை கண்டு நான் யாரென்று அறிவார்கள்.
இயேசு கிறிஸ்து கூறியதுபோலவே குற்றவாளியாய் சிலுவையில் உயர்த்தப்பட்டபின்பு ஒரு கள்வன் (லூக்கா 24:43), பரிசுத்தவான்கள் ( மத்தேயு 27:53), நூற்றுக்கு அதிபதி (மத்தேயு 27:54), குத்தினவர்கள் ( யோவான் 19:34-37) என்று பலபேர் அவரை விசுவாசித்து ஏசாயா 53:12 ஐ நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இயேசுவின் சிலுவை உயர்த்தப்படுதலே நித்திய ஜீவனை பெறுவதற்கான வழி என்று இயேசு யோவான்் 3:15 ல் கூறியுள்ளார்.
யோவான் 12:32 ல் தான் சிலுவையில் உயர்த்தபட்டபின்பு யாவரையும் இழுத்துக்கொள்வதற்காக கூறுவது பாவ மன்னிப்பும், இரட்சிப்பும் சார்ந்ததாகும். சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுதான் வானோர் பூதலத்தோர் யாவரும் அறிக்கை செய்யும் , வணங்கும் இயேசுவாக ஆனார். அப்போஸ்தலர் 2:32-36.
சிலுவை மரணம் உலகிற்கு அவமானமான அம்சமாக இருக்கலாம். இரட்சிக்கபடுகிறவர்களுக்கோ தேவ பலமாயிருக்கிறது. 1கொரிந்தியர் 1:23-29.
சிலுவையில் மரித்த இயேசுவை பிரசங்கிப்பதுவே பாவமன்னிப்புக்கு அவசியமானது. ஞானோந்திரியங்களை பேசுவதைவிடவும் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை பேசுவதே சிறப்பானது.
சிலுவை மரணமே மாம்சத்தில் வந்த இயேசுவை பிரகடனபடுத்துவதாகும்.
சிலுவை வழியாகதான் சிங்காசனம் செல்ல முடியும்.
சிலுவையில் மரித்த இயேசுவினால்தான் தேவனிடம் வரமுடியும்.
மீட்பு என்பது தேவகுமாரனாக உயர்த்தபட்டதில் அல்ல, மனுஷகுமாரனாக உயர்த்தப்பட்டதிலே உள்ளது.
கர்த்தாவே உம் மகனை குற்றவாளியாக உயர்த்த அனுமதித்தீர். இதனால்தான் எங்கள் பாவங்கள் மன்னிக்கபப்டுகிறது என்பதை அறிந்து உம்மை உயர்த்துகிறோம்.