நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்
My little children,these things I write to you,so that you may not sin. (1John 2:1)
John 5:14; John 8:11; Romans 6:1,2,15; 1Corinthians 15:34; Ephesians 4:26; Titus 2:11-13; 1Peter 1:15-19; 1Peter 4:1-3; Psalms 4:4,5; Ezekiel 3:21.
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். (1 யோவான் 2:1)
யோவான் 5:14; யோவான் 8:11; ரோமர் 6:1,2,15; 1கொரிந்தியர் 15:34; எபேசியர் 4:26; தீமோத்தேயு 2:11-13; 1பேதுரு 1:15-19; 1பேதுரு 4:1-3; சங்கீதம் 4:4,5; எசேக்கியேல் 3:21.
பாவம் செய்யாதே.
இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலிருந்து தன்னில் பாவமில்லையென்று சொல்லிக்கொள்கிறவன் எப்படிப்பட்டவனாயிருக்கிறான் என்பதை முதல் அதிகாரத்தில் கவனித்தோம். அதனை தொடர்ந்து ஒருவரும் பாவம் செய்யக்கூடாது என்பதற்காகவே கிறிஸ்துவின் வாக்கியங்களை புத்தகங்களாக உங்களுக்கு எழுதுகிறோம் என்று கூறுகின்றார். வாய்மொழி பாரம்பரியங்கள் காலங்கள் செல்ல செல்ல பலவிதமான மாற்றங்கள் அடையும். எப்பொழுதும் மாறாதிருக்கும்படியாகவே உரைக்கப்பட்டவைகளை எழுத்து வடிவமாக எழுதி வைக்கிறார். இந்த வாக்கியங்களை வாசித்து தியானித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வாசிக்கக்கேட்டு விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பாவம் நெஞ்சினுள் அமர்ந்திராமல் வெளியேற்றப்படும். இரட்சிக்கப்படாதவர்கள் இவைகளை வாசித்து தங்கள் நெஞ்சில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இரட்சிக்கப்பட்டவர்கள் – இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் திரும்ப பாவம் செய்து தேவ மகிமையை இழந்து போகாமலிருக்க – பின்வாங்கிப்போகாமலிருக்க கர்த்தருடைய வாக்காகிய இவைகளை நெஞ்சகத்தில் வைத்திருக்க வேண்டும். வசனம் நெஞ்சகத்தில் இருப்பதை 3:9 ல் அவருடைய வித்து என்று சொல்லப்பட்டுள்ளது. பாவம் செய்து வசனத்தை இழந்து தேவ கொபாக்கினைக்கு ஆளாகிறவர்களும் உண்டு. வசனத்தை இழந்து பாவம் செய்து பின்வாங்கிப் போகிறவர்களும் உண்டு. இரட்சிக்கப்படாதவர்கள் குறித்து கரிசனை கொள்ளுகிறவர்கள் தங்களிலிருந்து வசனம் விலகிப்போகாமலிருக்கவும், தாங்கள் வசனத்தை விட்டு விலகிப்போகாமலிருக்கவும் தக்கதாக எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். தேவனால் பிறந்தவனிலும், ஆவியினால் பிறந்தவனிடத்திலும் அவருடைய வசனம் ஆழமாய் பதிந்திருக்க வேண்டும். உபத்திரவம் வந்தாலும், குறைவுகள் வந்தாலும், எதுவும் நடவாதிருந்தாலும் வசனத்தை விடாதிருப்போமாக.
பாவம் செய்யாதிருக்க….
வசனத்தை கேட்க வேண்டும்..
வசனத்தை வாசிக்க வேண்டும்.
வசனத்தை தியானிக்க வேண்டும்.
வசனத்தை ஆராய வேண்டும்.
வசனத்தைசொந்தமாக்கிக்கொள்ள வேண்டும்..
வசனத்தை நம்ப வேண்டும்..
வசனத்தை சுமக்க வேண்டும்.
வசனத்தை அறியாதோருக்கு அறிவிக்க வேண்டும்.
வசனத்தோடு இணைந்து நடக்க வேண்டும்.
சில கேள்விகள்…..
பாவம் செய்யாமல் தப்பிப்பதற்கு எந்த வாக்கியங்களை பிடித்துக்கொள்ள வேண்டும்?…
நியாயபிரமாண வார்த்தைகளையா..
தீர்க்கதரிசனங்களையா?…
ஆசீர்வாத வாக்குகளையா?…
ஆவியின் பிரமாணமாகிய கிறிஸ்துவின் வாக்குகளையா?…
நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். சங்கீதம் 119:67-72.