நீங்கள் தேவனால் உண்டாயிருந்து அந்திகிறிஸ்துக்களை ஜெயித்தீர்கள்.
You are of God, little children, and have overcome them. (1John 4:4)
1John 4:6; 1John 3:9,10; 1John 5:19; 1John 2:13; 1John 5:4; Romans 8:37; Ephesians 6:10; Revalation 12:11.
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். (1 யோவான் 4:4)
1யோவான் 4:6; 1யோவான் 3:9,10; 1யோவான் 5:19; 1யோவான் 2:13; 1யோவான் 5:4; ரோமர் 8:37; எபேசியர்6:10; வெளி 12:11.
அந்திகிறிஸ்துக்கள் ஜெயிக்கப்பட வேண்டியவர்கள்.
ஒரேயொரு ஆளுமை குறித்து இங்கு குறிப்பிடவில்லை. அந்திகிறிஸ்துவின் ஆவியை உடையவர்களாக இருக்கிறவர்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது. அந்திகிறிஸ்துவை ஜெயிக்க இயேசு வரப்போகிறார். ஆனால் அந்திகிறிஸ்துக்களாக எங்கும் சுற்றிக்கொண்டு திரிகிறவர்களை நாம் தான் ஜெயித்தாக வேண்டும். அதாவது இயேசு பாவத்தையும் மரணத்தையும் ஜெயித்து அந்திகிறிஸ்து என்ற ஒரே ஆளுமையை ஜெயிக்க காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் விசுவாசித்து நம் இருதயத்தில் நிலை நிறுத்திக்கொண்டு ஜெயித்த இயேசுவின் நாமத்தில் அந்திகிறிஸ்துவின் ஆவிகளை ஜெயிப்பேன் என்ற நம்பிக்கையை வெளிபடுத்த வேண்டும். இந்த வெற்றியை மிகவும் எளிதாக யோவான் எடுத்தியம்புகின்றார்.
இந்த அந்திகிறிஸ்துக்களை ஜெயிக்க தேவனுடைய மனிதர்கள் தேவனால் பிறந்திருக்க வேண்டும். நமது பிறப்பின் தன்மையே நம்மை உலகிற்கு இன்னாரென்று காண்பிக்கின்றது. ஆடைகளின் அடிப்படையில் அல்ல, கல்வியின் அடைப்படையியலல்ல, அந்தஸ்து செல்வம் அடைப்படையியலல்ல, குலத்தின் அடைப்படையியலல்ல, நாம் தேவனால் பிறப்பிக்கப்பட்டு தேவனுடைய தன்மையின் அடிப்படையிலே வெற்றியை சொந்தமாக்கிக் கொள்கின்றோம். அந்திகிறிஸ்துவின் ஆவிகளை அடையாளம் கண்டுக்கொள்வதற்கு அவைகளின் கிரியைகளை அடையாளம் காணவும், அவைகளின் வெளிப்பாடுகளை அடையாளம் கண்டுக்கொள்ளவும் நாம் தேவனால் பிறந்திருக்க வேண்டும். தேவனால் பிறப்பது தேவனைப் போலிருப்பதினாலும் தேவனுடைய ஜீவனை உடையதாய் இருப்பதினாலும் அவர்களை ஜெயிக்கிறார்கள். தேவனுடைய பலம், தேவனுடைய ஞானம் போன்றவை தேவனால் பிறப்பிக்கப்படுகிறவனிடத்தில் உண்டாகின்றது. தேவனுடைய தூதர்கள் அவனை சுற்றிலும் காவலாயிருக்கிறார்கள்.
நமது வெற்றிதான் நாளைய சரித்திரம். நாளைய சரித்திரமே கிறிஸ்துவின் பரிபூரண வெற்றிக்கு அச்சாரம். நாம் வெற்றியடைவதினால் பிதாவும், குமாரனும் மகிமையடைகிறார்கள். இந்த வெற்றியை சொந்தமாக்க நமக்குள்ளே இருப்பவர் யார் என்று அறிவோமாக.
கேள்வி. தாங்கள் தேவனால் பிறந்திருப்பது உண்மையாயின் தாங்கள் பெற்ற வெற்றிகள் எவைகள்?
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 1கொரிந்தியர் 15:57.
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. 1கொரிந்தியர் 2:9-16.