நீங்கள் என்னை தேடுவீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரலாகாது.

நீங்கள் என்னை தேடுவீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரலாகாது.

You will seek Me and not find Me,and where I am you cannot come. (John 7:34)
Jn8:21-24; Jn13:33-36; Jn14:3,6; Jn17:24; Mt23:39; Mk2:20; Lk13:24,25,34,35; Lk17:22,23; Pr1:24-31; Ps32:6; Isa55:6; Hos5:6.

 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார். (யோவான் 7:34) 

யோவான் 8:21-24; யோவான் 13:33-36; யோவான் 14:3,6; யோவான் 17:24; மத்தேயு 23:39; மாற்கு 2:20; லூக்கா 13:24,25,34,35; லூக்கா 17:22,23; நீதிமொழிகள் 1:24-31; சங்கீதம் 32:6; ஏசாயா 55:6; ஓசியா 5:6.

நீங்கள் வரலாது:

கிறிஸ்துவின் இராஜ்ஜியமாகிய பரலோக இராஜ்ஜியத்துக்கு பேர் எழுதப்பட்டவர்கள் மாத்திரமே பங்காளியாவர்.

கிறிஸ்தவர்களாயிருப்பதினாலேயோ, பெரிய சிறிய பிரசங்கியாயிருப்பதினாலேயோ, சபை போதகராயிருப்பதினாலேயோ, சபைதலைவர்களாயிருப்பதினாலேயோ, பேராயர், போப்பாகயிருப்பதினாலேயோ, விவிலிய பேராசிரியர்களாயிருப்பதினாலேயோ, அற்புதங்களை செய்பவர்களாயிருப்பதினாலேயோ, வரங்களை உடையவர்களாயிருப்பதினாலேயோ, பெரும் காணிக்கைகளை கொடுப்பவர்களாயிருப்பதினாலேயோ, வெள்ளுடை தரித்தவர்களாயிருப்பதினாலேயோ, இன்னும் பலவாறோ இருப்பதினாலேயோ பரலோக இராஜ்ஜியம் சென்றுவிட இயலாது.

அவருடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி தன்னையும், தன்குடும்பத்தையும் உலக இச்சைகளிலிருந்தும், ஜீவனத்தின் பெருமைகளிலிருந்தும் காத்துகொள்கிறவன் மாத்திரமே பரலோகை அடைவான்.

இயேசுவை காண வேண்டுமானால், பரலோகை காண வேண்டுமானால் கிறிஸ்துவையும், பிதாவையும் விசுவாசிக்க வேண்டும். மோசே கூறியுள்ள வாக்கியங்களை நம்ப வேண்டும்.

விவிலியத்தை பிரசங்கித்து கைதட்டல் வாங்குவதல்ல, பிரசங்க ஊழியமானது பிரசங்கிக்கும்போதே ஆத்துமாக்களில் ஆவியானவர் கிரியை செய்ய வேண்டும். அப்படிபட்ட ஊழியர்கள் எங்கே?
அதனை விரும்புகிற விசுவாசிகள் எங்கே?

கர்த்தாவே உம் குமாரன் மூலம் நீர் எங்களுக்கு தந்த வாக்கியங்களை விசுவாசித்து அதன்படி நடந்து , நடப்பித்து உம் இராஜ்ஜியம் வருவதற்கு பதில் உம் வார்த்தைகளை தாறுமாறாக பிரசங்கிக்கும் – வியாக்கியானிக்கும் மகோன்னதர்கள் எழும்பி ஜனங்களை அழிவுக்கு கொண்டுபோகிறார்களே எங்களை இரட்சியும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME