நீங்கள் உலகத்தாராயிராததினால் உலகம் உங்களைப் பகைக்கிறது

நீங்கள் உலகத்தாராயிராததினால் உலகம் உங்களைப் பகைக்கிறது

U are not of world, but I chose u out of world, therefore world hates u. (John 15:19)

John 15:16; John 17:14-16; Ephesians 1:4-10; Ephesians 2:2-5; Titus 3:3-7; 1Peter 2:9-12; 1Peter 4:3; 1John 3:12; 1John 5:19,20; Revelation 12:9,17; Revelation 20:7-9.

நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. (யோவான் 15:19)

யோவான் 15:16; யோவான் 17:14-16; எபேசியர் 1:4-10; எபேசியர் 2:2-5; தீத்து 3:3-7; 1பேதுரு 2:9-12; 1பேதுரு 4:3; 1யோவான் 3:12; 1யோவான் 5:19,20; வெளி 12:9,17; வெளி 20:7-9.

உலகம் பகைக்கக் காரணம்:

கிறிஸ்து மண்ணுக்குரியவர் அல்ல, விண்ணுக்குரியவர். மண்ணிலிருந்தல்ல விண்ணிலிருந்து வந்தவர். 1கொரிந்தியர் 15:45-49. மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதன் திரும்பவும் மண்ணுக்கு திரும்பியதினால் அவனை மறுபடியும் விண்ணுக்கு திருப்பவே விண்ணிலிருந்து வந்தார் இயேசு. மண்ணிலே உழன்று பாவத்திலே வளர்ந்து மரணத்தையே பலனாயடைந்த மனிதனை இரட்சித்து விண்ணுக்குரியவனாக மாற்றவே கிறிஸ்து உலக இரட்சகரானார். மண்ணை அல்ல மண்ணில் வாழும் மனிதனை மீட்கவே அப்படியானார். அந்த இரட்சண்ய திருப்பணியை செய்யவே இயேசு தமது சீஷர்களை தெரிந்துக் கொண்டார். அவர்கள் மன அளவிலும், செயலளவிலும் தாங்கள் மண்ணுக்குரியவர்களல்ல என்ற உணர்வை உருவாக்கவே இயேசு அவர்களைப் பயிற்றுவித்தார். இப்பொழுது சொல்லுகிறார்: நீங்கள் உலகத்தாராயிராததினால் கட்டாயம் உலகம் உங்களைப் பகைக்கும். ஆனால் நான் உங்களை சிநேகிப்பேன்.

கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் உலகத்தால் சிநேகிக்கப்பட அல்ல, உலகத்தால் பகைக்கப்படவே அழைக்கப்பட்டுள்ளார்கள். உலகத்தால் பகைக்கப்படுகிறவர்களாகிய ஊழியக்காரர்கள் கிறிஸ்துவால் சிநேகிக்கப்படவே தெரிந்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். உலகத்திலிருந்தும், பாவத்திலிருந்தும், பிசாசின் பிடியிலிருந்தும், மாம்சத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் மீட்கப்பட்ட ஊழியக்காரர்கள் மற்றும் தேவமக்கள் திரும்ப அவைகளுக்கு நேராக தங்கள் இருதயங்களைத் திருப்பாதிருக்கும் வரைக்கும் இவைகளெல்லாம் சேர்ந்து அவர்களைப் பகைத்துக்கொண்டேயிருக்கும்.

இந்த 5 விதமான தீமையின் முகவர்கள் நாம் இவ்வுலகில் ஜெயிக்கக்கூடாதபடிக்கு போராடிக்கொண்டேயிருக்கும். கர்த்தராகிய இயேசு ஜெயித்ததுபோல நாமும் அழிந்துபோகக்கூடியவைகளினால் நம்மை அலங்கரிக்காமல் அழியாதவைகளினால் அலங்கரிக்கப்பட்டு ஜெயிக்கிறவர்களாக மாறுவோம்.

உலகம் என்னைத் தோற்கடித்திருக்கலாம் அல்லது தோற்கடிக்க முயலலாம், ஆனால் உன்னதர் என்னைத் தனதாக்கிக்கொள்வார்.

முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். தீத்து 3:3-7.

ADD YOUR COMMENT

Powered By Indic IME