அப்பம்

நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள்.

you seek Me,not because you saw the signs,but because you ate of loaves and were filled. (Jn6:23-26(26).
Jn6:15,64; Act8:18-21; Ro16:18; Phi2:21; Phi3:19; 1Ti6:5; Jas4:3,4; Ps78:29-31,36-38; Ps106:12-14; Eze33:31,32; Mic6:6-8.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(யோவான் 6:23-26(26)) .

யோவான் 6:15,64; அப்போஸ்தலர் 8:18-21; ரோமர் 16:18; பிலிப்பியர் 2:21; பிலிப்பியர் 3:19; 1தீமோத்தேயு 6:5; யாக்கோபு 4:3,4; சங்கீதம் 78:29-31,36-38; சங்கீதம் 106:12-14; எசேக்கியேல் 33:31,32; மீகா6:6-8.

அப்பத்திற்காய் கர்த்தரை தேடுதல்:

இயேசுகிறிஸ்துவுக்கு மனுஷரின் உள்ளத்தில் இருப்பதை அறிகிற அறிவு இருந்ததினால்தான் அவனுடைய எண்ணங்களை வெளிபடுத்துகிறார். மனுஷன் முகத்தை பார்க்கிறான். கர்த்தரோ இருதயத்தை ஆய்ந்து அறிகிறார்.

இயேசுவின் காலத்திலும் இயேசுவை உண்மையாய் பின்பற்றிய சிலர் இருந்தாலும் பலர் உலகியல் நன்மைகளுக்காய் அவரை பின்பற்றினர்.

சபை சரித்திர காலத்திலும் இத்தகைய மனிதர்கள் ஏராளமாய் இருந்தனர். இதனால்தான் சபைகளில் பிரிவினையும், தப்பறைகளும், பாவங்களும் தலைவிரித்தாடியது.

இக்கால கிறிஸ்தவ சமூகத்திலும் உண்மையாய் கர்த்தரை தேடுகிற மக்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாகவே இருக்கின்றார்கள்.
தாங்கள் ஜெனிப்பிக்கப்பட்ட அல்லது தங்களை இணைத்துகொண்ட திருச்சபையில் நிலைத்திருந்து தங்கள் சபையின் குறைவுகளை நீக்கி சபையை தூய்மைபடுத்துகிற பணியை செய்வதற்கு பதிலாக பதவிக்காகவும், dignity ஐ காப்பதற்காகவும், உலகியல் ஆசீர்வாதங்களுக்காகவும், அபிஷேகத்திற்காகவும், வரங்களுக்காகவும் தன் சபையை விட்டு ஓடுகிற – அலைகிற(சங்59:6,14) மக்கள்களாக இருக்கிறார்கள் (யூதா1:12,13).

இக்கால கிறிஸ்தவ மக்களுக்கு தப்பறையின் தாக்க விளைவு எத்தகையது என்று புரிந்துகொள்ள முடியாதபடிக்கு பிசாசானவன் அவர்களின் கண்களை குருடாக்கியுள்ளான்.

மண்ணுக்காய், பொன்னுக்காய், கல்லறைகளுக்காய், செழிப்புக்காய் ஓடுகிற மக்கள் கூட்டத்தின் மத்தியில் உண்மையாய் கர்த்தரை தேடுகிற கூட்டத்தில் தன்னை இணைத்துகொண்டு அவரோடு இணந்துவாழ விருப்பமா?

எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு இக்காலத்தில் திருச்சபையின் சிறிய – பெரிய மேய்ப்பர்கள் ஏசாயா 56:10-11; எரேமியா 5:27-31 ன் படியாய் காணப்படுகிறார்கள்.
இவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாய் இருப்பதில்லை,
கொடுத்தால் கொண்டாட்டம், இல்லையெனில் சூதுவாது செய்கிறார்கள்,
துரோகம் செய்கிறார்கள்,
மனசாட்சி இல்லாதிருக்கிறார்கள், மனிதாபிமானம் இல்லாமலிருக்கிறார்கள், தோற்றத்திலும், நிஜத்திலும் ஐசுவரியவான்களாக இருக்க விரும்புகிறார்கள்,
பேச்சில் பெலசாலிகளாக இருக்கிறார்கள்,
செயலிலோ வீணரும், கனியற்றவர்களுமாயிருக்கிறார்கள்.

நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி உன்னை இரட்சித்துள்ளார்.
(1தீமோத்தேயு 6:6-12).

உண்மையுள்ள யோசுவா, காலேப், தீமோத்தேயு மாதிரி மாறுங்கள்.
பணம், உணவு, பதவி, ஐசுவரியம், அந்தஸ்து, கல்வி அல்ல உன்னை நல்ல மனிதனாக மாற்றுவது, கிறிஸ்துவில் நிலைத்திருந்து சிலுவையை சுமப்பதினாலேயே நீ நற்குல திராட்சை செடியாக மாறுவாய்.

உன்னை பிறர் நம்பும்படி நடந்துகொள்.
உன் ஊழியன் – தலைவன் நம்பும்படி நட.
உன் குடும்பம் நம்பும்படி நட.
உன் சபை நம்பும்படி நட.
இயேசு உன்னை நம்பும்படி நட.

கர்த்தாவே, இவ்வுலகிற்காய் நாங்கள் மீட்கப்படவில்லை, உம் மகனின் ஆளுகைக்காய் நாங்கள் மீட்கப்பட்டுள்ளோம். எனவே, இவ்வுலகின் வேஷங்களை நாங்கள் மிதமாய் பெற்று அனுபவிக்கவும், உமது மகனின் சாயலை மிகையாய் பெற்று அனுபவிக்கவும் பெலம் தாரும். நாங்கள் எங்கள் நம்பிக்கையாகிய உம்மைபோல பிறரின் நம்பிக்கையாய் நாங்கள் வாழ போதியும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME