நிலைத்திருந்தால் நீங்கள் கேட்பது செய்யப்படும்
If you abide in Me, and My words abide in you, you will ask what you desire, and it shall be done for you. (John 15:7)
John 15:16; John 14:13,14; John 16:23; Galathans 5:16; 1John 3:22; 1John 5:14; Job 22:26,27; Psalms 37:4; Proverb 10:24b; Isaiah 58:8.
நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
(யோவான் 15:7)
யோவான் 15:16; யோவான் 14:13,14; யோவான் 16:23; கலாத்தியர் 5:16; 1யோவான் 3:22; 1யோவான் 5:14; யோபு 22:26,27; சங்கீதம் 37:4; நீதிமொழிகள் 10:24b; ஏசாயா 58:8.
கேட்பது செய்யப்படும்:
நீங்கள் கேட்பதை நான் உங்களுக்கு செய்ய நீங்கள் செய்யவேண்டியது என்ன?
நீங்கள் என்னில் நிலைத்திருக்க வேண்டும். எனக்குள் வாழ வேண்டும். என் அன்பிலே, என் கட்டளைகளில், என் தந்தையில், என் ஆவியில், என் பரிசுத்தத்தில், என்னை பற்றும் விசுவாசத்தில், என் மீதுள்ள நம்பிக்கையில் முழு மனதுடன் நிலைத்திருக்க வேண்டும்.
என்னில் நீங்கள் நிலைத்திருப்பது பரிசோதித்து பார்க்கப்படும். செல்வம், ஆஸ்தி, பதவிகள், படிப்புகள், கவர்ச்சி, இச்சை, பொருளாசை இவைகளை கொண்டு பரிசோதிக்கப்படும். என் வசனம் உங்களில் இருப்பதையும் பரிசோதித்து பார்க்கப்படும். நீங்கள் எவ்விதத்திலும் மருளாதிருப்பதை உறுதி செய்த பின்பே நான் உங்களில் நிலைத்திருப்பேன். நானும் என் தந்தையும், என் ஆவியும் உங்களில் நிலைத்திருக்கும். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் உங்களில் வாசம்பண்ண ஆரம்பிக்கும். உங்களிலிருந்து உண்டாகும் ஜீவ வாசனையினிமித்தம் என் தந்தை நீங்கள் கேட்பதை உங்களுக்கு செய்யும்படியாக கட்டளையிடுவார். நானும் நீங்கள் கேட்பது யாவையும் உங்களுக்கு உண்டாகும்படி உங்களுக்கு அனுசரணையாயிருப்பேன்.
இருபக்க இணைப்பு பூர்த்தியாகும்போது மாம்ச இச்சைகளின் படியோ, உலக போக்கு படியோ, பிறரின் தூண்டுதல் படியோ எதையும் அவரிடம் கேட்க துணியமாட்டோம். அவருக்கு பிரியமானதை செய்ய அவர் விரும்புவதையே கேட்போம். அப்பொழுது எப்பொழுதும் நம்மோடிருக்கிறவர் நாம் அவருக்கு பிரியமானவர்கள் என்று நம்பின படியினால் நம் தேவைகளை சந்தித்து நம்மை உன்னத மகிழ்ச்சியின் பாதையில் நடத்துவார்.
நமது ஓட்டம் பெற்றுகொள்ளும்படியாகவும், நமது தேட்டம் கண்டடையும்படியாகவும், நமது வாஞ்சை நிறைவேறும்படியாகவும் இருக்க அருள் செய்கிறவரில் நிலைத்திருந்து வாழுவோம்.
நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு. பிலிப்பியர் 1:27-30.