அவர் தமது ஆவியில் தந்தருளினதினால் நம்மில் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்

அவர் தமது ஆவியில் தந்தருளினதினால் நம்மில் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.

By this we know that we abide in Him, and He in us, because He has given us of His Spirit. (1John 4:13)

1John 4:15,16; 1John 3:24; John 14:20-26; Romans 8:9-17; 1Corinthians 2:12; 1Corinthians 3:16,17; 1Corinthians 6:19; Galathians 5:22-25; Ephesians 2:20-22.

அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். (1 யோவான் 4:13)

1யோவான் 4:15,16; 1யோவான் 3:24; யோவான் 14:20-26; ரோமர் 8:9-17; 1கொரிந்தியர் 2:12; 1கொரிந்தியர் 3:16,17; 1கொரிந்தியர் 6:19; கலாத்தியர் 5:22-25; எபேசியர் 2:20-22.

ஆவியில் நமக்கு தந்தது.

தேவனின் அன்பை தேவன் தமது ஆவியினால்தான் நமக்கு தருகிறார். இதனை பவுல் ரோமர் 5:5 ல் கூறியுள்ளார். தேவனால் துவக்கம் பெற்ற அன்பு வேறு எவ்விதத்திலும் நாம் பெற்றுக் கொள்ள இயலாது. தேவனுடைய ஆவியால் இந்த அன்பை நாம் பெற்றிருப்பதினால் தான் கிறிஸ்துவையும், தேவனுடைய அழங்களையும் அறிகின்றோம். இந்த அறிவு நம்மை தேவனோடும் அவரது குடும்பத்தோடும் இணைக்கின்றது. அவர் நம்மிலும் நாம் அவரிலும் நிலைத்திருக்க முடிகின்றது.

இயேசு கிறிஸ்துவில் பிதாவும், பிதாவில் கிறிஸ்துவும் நிலைத்திருப்பதற்கான அடிப்படை காரணம் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருப்பதுவே. நாம் அவரிலும், அவர் நம்மிலும் நிலைத்திருப்பதற்கு அடிப்படை காரணம் நாம் ஆவியினால் பிறந்து ஆவியினால் வசனங்களுக்கு கீழ்படிந்து ஆவியினால் தேவ அன்பை பெற்று ஆவியினால் இயேசுவை கிறிஸ்து என்று அறிக்கைபண்ணுவதினாலேயாகும். வசனத்தினால் (சுவிசேஷத்தினால்) உண்டாகும் பிறப்பின் மூலம் கிறிஸ்துவின் வீட்டுக்குள் வருகின்றோம். ஆவியினால் உண்டாகும் பிறப்பின் மூலம் நாம் அவருக்குள் வருகின்றோம். ஆகவே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை தேவையான வசனமும் அன்பும் கிறிஸ்துவும் தேவ ஆவியினாலேயே நமக்குள் உருவாக்கப்படுகின்றது. ஆவியினாலேயே வசனம் உண்டாகியுள்ளது. 1தீமோ3:16,17. ஆவியினாலேதான் கிறிஸ்து நமக்குள் வாழகின்றார் கொலோ1:27, கலா2:20. ஆவியினாலே தேவ அன்பு நமக்குள் ஊற்றப்பட்டுள்ளது. ரோமர் 5:5. ஆவியினால்தான் இயேசுவை கிறிஸ்து என்று அறிக்கையிட இயலும். ஆவியினால் உரம் கொள்ளாத யாவும் ஆகாயத்தில் சிலம்பம் அடிப்பதைப் போன்றது.

அவர் நம்மிலும் நாம் அவரிலும் இணைந்து வாழும்படியான முன்னெடுப்புகள் யாவும் இவ்வுலகத்தில் நம்மை அவரின் சீஷர்களாகவே மாற்றுகின்றது. மட்டுமல்ல பரலோகத்தில் நாம் அவருடன் வாசம் செய்வதற்கான அச்சாரமும் ஆகின்றது. இணைந்து பயணிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையாகும். குடும்பம் என்பது கணவன் மனைவியின் இணைவு. ஆவிக்குரிய குடும்பம் என்பது நானும் அவரும் இணைந்து வாழ்வது.

நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். எபேசியர் 1:13,14..

காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். கலாத்தியர் 4:5-7.

ADD YOUR COMMENT

Powered By Indic IME