இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று நியாயப்பிரமாணம் கூறுகின்றதே.
Moses, in the law, commanded us that such should be stoned. (John8:4,5)
Num15:32-41; Eze16:20-42; Eze23:44-49; Lev20:1-27; Deu22:13-30; Judg19:1-10; Mt1:18-22; 1Cor5:1-5; 1Cor6:1-20.
இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். (யோவான் 8:5)
எண்ணாகமம் 15:32-41; எசேக்கியேல் 16:20-42; எசேக்கியேல் 23:44-49; லேவியராகமம் 20:1-27; உபாகமம் 22:13-30; நியாயாதிபதிகள் 19:1-10; மத்தேயு 1:18-22; 1கொரிந்தியர் 5:1-5; 1கொரிந்தியர் 6:1-20.
விபசாரம் தண்டனைக்குரியது:
நியாயபிரமாணம் வருமுன்பு பலதார திருமணங்கள் ஆதிபிதாக்களிடையில் காணப்பட்டது.
நியாயபிரமானம் வந்தபின்பும் தாவீது, சாலொமோன் போன்றவர்களிடையில் மிகுதியாய் காணப்பட்டது. நியாயபிரமாணம் ஒருபோதும் பலதார திருமணத்தை அங்கீகரிக்காது அதை விபசாரமாகவே கருதி தண்டனைக்குட்படுத்தியது. தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் இத்தகைய ஒழுக்க கேடானவைகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
இதன் எதிரொலியாகவே இயேசுகிறிஸ்துவும் அவரின் சரீரமாகிய சபையும் ஒழுக்ககேடுகளை, முறைகேடுகளை ஏற்றுகொள்ளவில்லை.
சபையானது ஸ்தாபனாமாக உருவாகி வந்த காலத்தில் பவுல் போன்றோர் திருப்பணி செய்வதற்கு ஒருதாரம் மட்டுமே என்று வலியுறுத்தினார். சபையின் கோட்பாடுகளில் இன்று வரையிலும் இது காணப்படுகிறது.
ப.ஏ. முற்பிதாக்களை பிரசங்கிக்கும் பலர் அவர்களின் பலதார திருமணங்களை கவனத்தில் கொள்ளாததினால் சபைகளில் விபசாரங்களும், காதல் களியாட்டங்களுமாகிய அசுத்தங்கள், ஒழுக்ககேடுகள் பெருகுகின்றன.
நாம் கிறிஸ்துவை பிரசங்கிக்கவும், பின்பற்றவும் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளோம்.
நாம் செய்யும் ஒழுக்ககேடான பாவங்கள் அனைத்திற்கும் கணக்கு ஒப்புவித்துதானாக வேண்டும்.
பாவம் செய்கிறவர்களுக்கு ஒத்து போகிறவர்களுக்கும் அதே தண்டனைதான்.
தூய்மையான சபையை – சத்தியத்தை கொண்டுள்ள நாம் ஒழுக்க கேடானவர்களை விட்டு விலகுவோம். விலக்குவோம்.
அவர் பரிசுத்தர்.
நாமும் பரிசுத்தராயிருப்போம்.
கர்த்தாவே உம் தூய்மையின் பாதையில் உம் ஆவியானவரை கொண்டு உம் குமாரனின் சரீரமாகிய சபைக்குள் எங்களை செம்மையாய் வாழவைப்பீராக.