நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை, அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்

நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை, அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.

I do not seek My own glory; there is One who seeks and judges. (John 8:50)

Jn5:41,20-23,45; Jn7:18; Jn12:47,48; Jn17:26.

நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை, அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார். (யோவான் 8:50) 

யோவான் 5:41,20-23,45; யோவான் 7:18; யோவான் 12:47,48; யோவான் 17:26.

மகிமையை எதிர்பார்க்கும் தேவன்:
இயேசுகிறிஸ்து பிதாவினால் உலகிற்கு அனுப்பப்பட்டவர். அவர் அனுப்பப்பட்டதின் நோக்கம் என்னவெனில். 

  • எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறியவும் செய்யும்படி செயல்படவேண்டும்.
  • மனுக்குலம் மீட்கப்படும்படியாக தன்னைப் பலியாக தரவேண்டும்.
  • மனிதனாக பூமியில் இருக்கும்போது தேவனுக்குரிய மகிமையை எடுத்துகொள்ளும்படி நடந்து கொள்ளலாகாது.
  • எல்லா சூழ்நிலைகளிலும் பிதாவாகிய தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாகும்படி நடந்துகொள்ள வேண்டும்.
  • தந்தையின் விருப்பம் நிறைவேற்றுவதையே வாழ்வாக கொண்டிருக்க வேண்டும்.
    இயேசுவுக்கு மகிமை செலுத்துவதற்கு பதில் மக்கள் தேவனை மகிமைபடுத்தினார்கள் என்று சுவிசேஷங்களில் வாசிக்கிறோம்.
    பிதாவின் கிரியைகளைச் செய்து பிதாவுக்கு மகிமையைக் கொண்டு வந்ததினால் பிதாவானவர் சில தருணங்களில் குமாரனை மகிமைப்படுத்தியுமிருக்கின்றார்.
    பெயர்பிரஸ்தாபம் வேண்டும் என்று எந்த காரியங்களையும் செய்யாமல் யாவும் செம்மையாய் இருக்கவேண்டும் என்று நற்கிரியைகளைச் செய்வோமெனில் மகிமையும், கனமும், புகழ்ச்சியும் உண்டாகும்.
    மற்றவர் நம்மைக் கவனிக்க வேண்டும் என்று எதையும் செய்யாமல் தேவன் நம்மை கவனிக்கின்றார் என்று எதையும் செய்யக்கடவோம்.
    இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளுக்குக் கீழ்படிந்து பிதாவுக்குப் பிரியமானதைப் பரிசுத்த ஆவியின் துணைக்கொண்டு செய்வோமெனில் அதுவே தேவனுக்குப் பிரியமாயிருக்கும்.
    பிதாவுக்கும், குமாரனுக்கும், ஆவிக்கும் மகிமை வராத எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் பிதாவின் நியாயதீர்ப்புக்கு நாம் ஆளாவோம்.
    மகிமை தேவனுக்குரியது. மனிதர்க்குரியதல்ல..
    அந்நிய தெய்வங்களுக்குரியதும் அல்ல.
    கர்த்தாவே நீர் உம் குமாரன் மூலம் மகிமையை எதிர்பார்க்கின்றீர் என்பதை அறிந்தோம். இனி நாங்கள் ஞானமாய் நடந்து உமக்கு மகிமை வரத்தக்கதாய் இருக்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME