நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு கொடுத்திருக்கிறார்.
Father judges no one, but has committed all judgment to the Son. (John 5:22)
Mt11:27; Mt16:27; Mt25:31-46; Mt28:18; Act10:42; Act17:31; Ro2:16; Ro14:12; 2Co5:10; 2The1:7-10; 2Tim4:1; 1Pet4:5; Rev20:11,12.
அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 5:22)
மத்தேயு 11:27; மத்தேயு 16:27; மத்தேயு 25:31-46; மத்தேயு 28:18; அப்போஸ்தலர் 10:42; அப்போஸ்தலர் 17:31; ரோமர் 2:16; ரோமர் 14:12; 2கொரிந்தியர் 5:10; 2தெசலோனிக்கேயர் 1:7-10; 2தீமோத்தேயு 4:1; 1 பேதுரு 4:5; வெளி 20:11,12.
நியாயதீர்ப்பு செய்யும் அதிகாரம்:
தேவன் அன்புள்ளவர்தானே, ஏன் நியாயதீர்ப்பு செய்கிறவராகவும் காட்சியளிக்கின்றார்?எதிர்மறையானவைகளின் இயக்கமே தேவன் அன்புள்ளவராகவும், நியாயந்தீர்க்கிறவராகவும் காட்சியளிக்க காரணம்.
தேவன் நியாயதீர்ப்பு செய்ததை பழைய ஏற்பாட்டில் கண்டிருக்கின்றோம். இயேசுகிறிஸ்து நியாயதீர்ப்பு செய்ததை நாம் சுவிசேஷங்களில் முழுமையாக பார்க்க முடியவில்லை. ஆனால் அவரின் கோபத்தை சில இடங்களில் காணலாம்.
இயேசுகிறிஸ்து அன்பின் தெய்வம். மீட்பின் தெய்வம் மட்டுமல்ல, நியாயதீர்ப்பின் தேவனாகவும் இருக்கிறார் என்பதை கிறிஸ்தவம் மறக்கலாகாது. எந்த அளவுக்கு அன்பின் இறுதி பரிமாணமாகிய தன் ஜீவனை கொடுத்து இரட்சிப்பை கொண்டு வந்தாரோ, அந்த இரட்சிப்புக்கு ஏற்றவாறு நடக்கவில்லையானால் அவரின் கோபம் பற்றியெரியும் என்பதையும் மறக்கலாகாது.
இரண்டுவிதமான தீர்ப்பு உண்டாகும் . நித்திய மகிழ்வுக்கான நியாயதீர்ப்பு, அநித்தியம் – நித்திய அழிவுக்கான தீர்ப்பு ஆகும்.
இயேசு நல்லவர்களையும் நியாயந்தீர்ப்பார், கெட்டவர்களையும் நியாயந்தீர்ப்பார், இஸ்ராயேலரையும் நியாந்தீர்ப்பார், புறஜாதியாரையும் நியாந்தீர்ப்பார், பரிசுத்தவானையும் நியாந்தீர்ப்பார், பிசாசையும் நியாய்ந்தீர்ப்பார்.
இயேசுகிறிஸ்து நியாயந்தீர்ப்பதற்கான அதிகாரத்தை பெற்றுள்ளார். அவரின் இந்த அதிகாரம் 3 பகுதிகளில் விரிவாக்கம் அடைகிறது.
நியாயந்தீர்ப்பு செய்வதற்குரிய அதிகாரத்தை அவர் பிதாவின் அருகில் இருக்கும்போதே பெற்றிருந்தார்.
பிதாவின் விருப்பத்தை இந்த பூமியில் செய்து நிறைவேற்றியதினால் இந்த உலகிலும் நியாயதீர்ப்பு செய்யும் அதிகாரத்தை பெற்றார்.
மட்டுமல்ல, உலகமுடிவிலும் இந்த அதிகாரம் முழுமையாய் செயல்படுத்தப்படும். அதுதான் இறுதி நியாயதீர்ப்பு ஆகும்.
இயேசுகிறிஸ்துவை சாதாரண மனிதனாக, அறநெறி போதகராக, சமய ஸ்தாபகராக, விடுதலையாளராக காணும் உலகமே உன் உள்ளத்தையும், உடலையும் , கிரியைகளையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதியாக வெளிப்படபோகிறதை நீ காணப்போகிறாய்.
நீ காணும்போது மனந்திரும்ப இடமுண்டாகாதபடிக்கு அது உன் வாசலை அடையும்.
அந்தோ பரிதாபம்.
மனந்திரும்பு,
பாதையை மாற்று,
புதிய பாதைக்கு வா.
கர்த்தாவே உம் குமாரனுக்கு இவ்வளவு பெரிய அதிகாரத்தை கொடுத்து முழு உலகையும் உம் கைக்குள் வைத்துள்ளீரே. இதை அறியாத உலகம் வேடிக்கை என நினைத்து வாழாவிருக்கின்றதே. இவர்கள் மனந்திரும்ப கிருபை செய்யும். மனமாறுதல் இவர்களுக்குள் உண்டாகட்டும்.