கண்டு, விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவன் பெறுவான். அதுவே பிதாவின் சித்தம்.
sees the Son and believes in Him may have everlasting life;and I will raise him up at the last day. (John 6:40)
Jn3:15-18,36; Jn5:24; Jn6:27,35,54; Jn10:28; Jn12:50; Jn17:2; Mk16:16; Ro5:21; Ro6:23; 1Jn2:25; 1Jn5:11-13; Jud1:21.
குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். (யோவான் 6:40)
யோவான் 3:15-18,36; யோவான் 5:24; யோவான் 6:27,35,54; யோவான் 10:28; யோவான் 12:50; யோவான் 17:2; மாற்கு 16:16; ரோமர் 5:21; ரோமர் 6:23; 1 யோவான் 2:25; 1 யோவான் 5:11-13; யூதா 1:21.
கடைசி நாளில் எழுப்புவதே பிதாவின் சித்தம்:
யோவான் 4:34-என்னை அனுப்பினவரின் சித்தபடி செய்வதே என் போஜனம் என்றார். 6:38.
5:30-எனக்கு சித்தமானதை தேடாமல் என் பிதாவின் சித்தம் தேடுகிறேன்.
6:39,40-விசுவாசிப்பவனை கடைசி நாளில் எழுப்புவதே பிதாவின் சித்தம்.
7:17- அவர் சித்தம் செய்கிறவன் அவர் உபதேசத்தை அறிவான்.
9:31-அவருக்கு சித்தமானதை செய்தால் அவர் செவிகொடுப்பார்.
இயேசுவை கண்டு, அவரில் விசுவாசம் வைக்கிறவன் கடைசி நாளில் எழுப்பப்படுவான். இயேசுவையும் விசுவாசிப்பவன் அல்ல, இயேசுவை மட்டுமே விசுவாசிப்பவன் எழுப்பப்படுதலுக்காளாகின்றான்.
யூதர்கள் ஆபிரகாம் முதல் மோசே போன்ற பெரியவர்களை நம்பினர். பிரமாணத்தை நம்பினர். முறைமைகளை பின்பற்றினர். ஆனால் இயேசுவை நம்புவதற்கு விருப்பமில்லை. அந்த யூதர்களிடம் கூறும்போது ஆபிரகாம் முதல் மோசே வரை யாவரும் என்னை காண ஆவலாயிருந்தனர். அவர்கள் என்னை கண்டிருந்தால் நம்பியிருந்திருப்பார்கள். நீங்கள் என்னை கண்டும் நம்பமாட்டேன் என்கிறீர்கள். என்னை கண்டு என்னை நம்பினால் ஜீவன் கிடைக்கும். கடைசிநாளில் எழுப்பப்படுவீர்கள் என்றார்.
இயேசுவை விசுவாசித்து வாழ்வதே நித்திய வாழ்வு. நித்திய வாழ்வின் முத்தாய்ப்பு கடைசிநாளில் எழுப்பபடுவதாகும். கடைசி நாள் எனும்போது 1கொரிந்தியர் 15:52 ல் எக்காளம் தொனிக்கும் நாளாகும். ஒருவன் நித்திய ஜீவன் பெற்றுள்ளானா இல்லையா என்பதை அந்த எக்காளமே தீர்மானிக்கின்றது.அழியாமையை பெற்றதற்கான அடையாளம் எக்காளத்தை கேட்கும் தன்மை ஆகும். இதனை விசுவாச உணர்வு எனவும் கூறலாம்.
நித்திய ஜீவன் என்பது ஈவு என்று சொல்வதைவிட விசுவாசிக்கிறவனில் இயேசு வாழ்வதாகும்.
ஏனெனில் இயேசுவே நித்திய ஜீவன்.
பிதா தம் மகனுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி இயேசுவை விசுவாசித்து ஏற்றுகொள்கிறவனுக்கு உயிர்ப்பு உண்டு என்ற வாக்கு தரப்பட்டுள்ளது. இதனை பிதா தமது வாக்குறுதியாகவும் தந்துள்ளார். அதே வேளையில் தம் விருப்பமாகவும் வைத்துள்ளார்.இந்த சித்தத்தை அவரே நிறைவேற்றுவார். ஆனால் இந்த சித்தம் நிறைவேற நாம் விசுவாசிக்க வேண்டும். நமது விசுவாசம் இயேசுவை மட்டுமே சார்ந்ததாயிருக்க வேண்டும்.
நமது பழைய சமய சம்பிரதாயங்கள், கலாச்சாரங்களை விட்டு இயேசு என்ற ஒருவரையே பின்பற்றிவர துணிந்திருக்க வேண்டும். அப்படியென்றால் இன்று நீ மரித்தாலும் உனக்கு நித்திய ஜீவன் உண்டு.
நீ கடைசி நாளில் எழுப்பப்படுவாய்.
கர்த்தாவே, நாங்கள் அழியா வாழ்வுபெற எங்களுக்காய் நீர் அனுப்பின உமது மகனை நாங்கள் கண்டு, அறிந்து, விசுவாசித்து கிரியை நடப்பிக்க எங்களை ஒப்படைக்கிறோம். எங்கள் விசுவாசம் எழுப்பப்படுதலுக்கு தகுதியானதாக இருக்கவும், நாங்கள் விசுவாசத்திலே மரித்து விசுவாசத்திலே பிழைக்கவும் எங்களுக்கு உதவி செய்யும்.