வசனங்கள்

ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.

Simon Peter,Lord,to whom shall we go? You have the words of eternal life. (John 6:68)
Jn5:24,39,40; Act4:12; Act5:20; Act7:38; 1Jn5:11-13; Jos24:15; 1Chr12:18; Ps73:25; Ps133:3; Pr4:13; Pr16:22.

சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. (யோவான் 6:68) 

யோவான் 5:24,39,40; அப்போஸ்தலர் 4:12; அப்போஸ்தலர் 5:20; அப்போஸ்தலர் 7:38; 1 யோவான் 5:11-13; யோசுவா 24:15; 1 நாளாகமம் 12:18; சங்கீதம் 73:25; சங்கீதம் 133:3; நீதிமொழிகள் 4:13; நீதிமொழிகள் 16:22.

யாரிடம் செல்வோம்?

குறைபாடுடைய பேதுரு கூறிய அருமையான வார்த்தை. உம்மைவிட்டுவிட்டு நாங்கள் யாரை பின்பற்றமுடியும். உமக்கு முன்வந்தவர்கள் யாவரும் கள்ளரும் கொள்ளைகாரருமாயிருக்க யாரை நாங்கள் பின்பற்ற முடியும்? உம்மிடத்தில் மட்டுமே நித்தியத்துக்கு ஏதுவானவைகள் உண்டு. ஆகவே, யார் பிரிந்து போனாலும் நாங்கள் உம்மையே பின்பற்றுவோம் என்றார்கள்.

கிறிஸ்துவில் இருப்பது வேறு எவரிலும், எவரிடத்திலும், எந்த நூலிலும் இல்லை. கிறிஸ்து நமக்கு தந்திருப்பவைகளே நமது வாழ்வுக்கு போதுமானது.

குறைவுள்ளோர், பிழையுள்ளோர், பாவிகள் தேவனுக்கு பிரியமாயிருக்கமாட்டார் என்பது உண்மை. ஆனால் பிழையுள்ள மனிதர்கள் மத்தியிலோ, அவர்களில் சிலரை கொண்டோ தேவன் செய்கிற மகத்துவமான பணிகளே கிருபை என்றறியப்படுகின்றது. இது நமக்கு ஆச்சரியமாயுள்ளது. எனினும் அவரின் கிருபை பலிதமாகி பாவிகளிடையில் தேவசெயல்கள் வெளிப்படுகின்றன. இவ்விதமான செயல்கள் அவர்கள் மனந்திரும்பவும், கிறிஸ்துவின் ஜீவனை கண்டடையவும் தேவன் உண்டாக்கும் கிருபையின் ஜீவவழி ஆகும்.

இயேசுவை விட்டு எங்கும் செல்லாதீர். இயேசுவிலே நிறைவை காண்பீர். அக்கம் பக்கம் பாராதீர்.
சோதோமின் பாவங்கள் சூழ்ந்துள்ளன. ஆபிரகாமைபோல தேவனை பின்பற்றுவீராக.

கர்த்தாவே, உம் மகனுக்குள் நாங்கள் மகிழ்ந்திருக்க, திருப்திபட்டிருக்க எங்களுக்கு போதித்தீர். எனவே நாங்கள் அவரில் நிலைத்திருந்து மிகுந்த கனிகளை கொடுக்க எங்களுக்கு போதித்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME