நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் இயேசுவை அனுப்பி அன்பை வெளிப்படுத்தினார்.
love of God was manifested toward us, that God has sent His only begotten Son into the world, that we might live through Him. (1John 4:9)
1John 3:16; John 3:16; Luke 12:6; John 1:14-18; 1John 5:11; John 6:51,57; John 10:10,28-30; John 11:25,26; John 14:6; Colossians 3:3,4.
தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. (1 யோவான் 4:9)
1யோவான் 3:16; யோவான் 3:16; லூக்கா 12:6; யோவான் 1:14-18; 1யோவான் 5:11; யோவான் 6:51,57; யோவான் 10:10,28-30; யோவான் 11:25,26; யோவான் 14:6; கொலோசெயர் 3:3,4.
நாம் பிழைத்தோம்.
பாவம் நம்மைக் கொன்றது. தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படியாமற்போனதால் நாம் தேவனுக்கு விரோதிகளானோம். தேவனின் சத்துருவாகிய சாத்தானோடு இணைந்துக் கொண்டோம். பிசாசானவனோடு சேர்ந்து தேவனுக்கு எதிராக மனுகுலம் எழும்பலாகாது என்று தீர்மானித்த தேவன் மனிதனின் தான்தோன்றிதனமான வளர்ச்சிக்கு தடை உண்டாக்கினார். தீமையை அழிக்க விருப்பம் கொண்ட தேவன் மரணம் என்ற ஆயுதத்தை இவ்வுலகில் கட்டளையிட்டார். இந்த பிரகடனம் சத்தானுக்கும் பாவம் செய்வோருக்கும் சாவுமணியாக கேட்டுக்கொண்டேயிருக்கும்படி இவ்வாறு செய்தார்.
தங்கள் பாவங்களை உணர்ந்து தேவனோடு தங்களை இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் தவறுகளை அறிக்கையிட்டு உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். தேவனுடைய சுவிசேஷத்துக்கு தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ல வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் திரும்பி வருதலின் அடையாளமாகியதும் – தேவனோடு சேர்க்கப்படுதலின் அடையாளமாகியதுமான திருமுழுக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். தேவனுடைய கட்டளைகளுக்கு முற்றிலும் தங்களை ஒப்ப்புக்கொடுக்க வேண்டும். தேவனை தொழுதுகொள்ளவும் – தேவனோடு உறவு கொள்ளவும் – தேவனுடைய விருப்பத்தை அறிந்து செய்யவும் – தேவனோடு இணைந்துக் கொள்ளவுந்தக்கதான பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்பொழுது இவர்கள் பிழைத்திருக்கிறார்கள் என்றாகும். மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்படுகின்றோம். ஜீவன் பெற்றவர்கள் ஜீவிக்கிறவரோடும், ஜீவன் பெற்றவர்களோடும் இணைந்து சுதந்தரவீதத்துக்கு பயணிப்பார்கள்.
மனுகுலம் பிழைக்கும்படிக்கே தேவனின் அன்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாசைகள், கல்வி, பதவிகள், ஐசுவரியம், ஆடம்பரம், உடல் இன்பம், காதல் போன்றவைகளோடு இந்த அன்பை இணைப்பதற்காக அல்ல. தேவனுடைய அன்பிலே பிறந்து ஜீவன் பெற்றவர்கள் இந்த அன்பைக்கொண்டு தேவனுடைய இராஜ்யத்தைக் கட்ட வேண்டும். இந்த அன்பைக்கொண்டு தன்னுடைய இராஜ்யத்தைக் கட்ட அனுமதியில்லை. அவரின் இராஜ்யத்தை நாம் கட்ட ஆரம்பிக்கும் போது தேவன் நமக்கு வீட்டைக் கட்டுவார். நம் குடும்பத்தை கட்டுவார், நம் பிள்ளைகளை கட்டியெழுப்புவார்.
உனக்கு கொடுக்கப்படாத ஒன்றை -உன்னை விரும்பாத ஒன்றை அடையும்படியாக உனக்கு கிடைத்த ஜீவனை அழித்துப்போட துடிப்பதென்ன? உன் ஜீவனைக்கொண்டு அவர்களை அவதூறாக பேசுவதென்ன? உன் ஜீவனைக் கொண்டு அவர்களை அழிக்க துடிக்கிறதென்ன? இவைகளெல்லாம் பாவம். மற்றவர்களிடம் இருக்கின்ற ஒன்றை நீ விரும்புவது – இச்சிப்பது மகா பாவம். மறுபடியும் மரணத்துக்கு பயணிக்கின்றாய். உனக்கு ஜீவன் தந்தவரே உனக்குரியதைக் கொடுக்கிறவர். நீ அவரிடமே செல்ல வேண்டும். அவரிடமே நீ கேட்க வேண்டும். அவர் உனக்கு தர விரும்பாத ஒன்றையும் நீ விரும்பாதே. நீ ஜீவபாதையில் வந்துவிட்டாய். மரணபாதைக்கு விரையாதே. நில்.. கவனி…
கேள்வி. ஜீவன் பெற்றவர்கள் காதல் போன்றவைகளில் ஈடுபடுவது மகாபாவம். இதை உணர்கின்றாயா?
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும். என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்; பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்; விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்குமென்று அவர்கள் சொல்வார்களாகில்; என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது. எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா. இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள். பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும். நீதிமொழிகள் 1:8-19.