நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்
உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான், ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார். (லூக்கா 15:32)
சங்கீதம் 51:8; நீதிபதிகள் 23:15; ஏசாயா 35:10; எரேமியா 31:20; எசேக்கியேல் 18:23; மீகா 7:18; மத்தேயு 18:11; லூக்கா 9:60; லூக்கா 15:11-32; 1 யோவான் 3:14
ஒருவர் இரட்சிக்கபட்டு -பாவ வாழ்வை விட்டு மனந்திரும்பி கிறிஸ்துவின் ஐக்கியத்துக்குள் வந்தபின்பு அவர்களின் பழைய வாழ்வை குறித்து விமர்சனம் செய்வதும் அந்த ஐக்கியத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாததும் மூத்த மகனின் தன்மை.
அப்பாவின் மகிழ்ச்சி எத்தகையது?
1.மகன் மனந்திரும்பியதினிமித்தம் உண்டான மகிழ்ச்சி.
2.மகன் தன் தகப்பன் வீட்டுக்கு திரும்பி வந்ததினிமித்தம் உண்டான மகிழ்ச்சி.
3.மகன் உயிர்ப்பின் அனுபவத்துக்குள் வந்ததினிமித்தம் உண்டான மகிழ்ச்சி.
4.காணாமற் போனவன் கண்டுபிடிக்கப் பட்டதினிமித்தம் உண்டான மகிழ்ச்சி.
நாம் மூத்தமகனை போலிருக்கின்றோமா?..
அப்பாவின் மகிழ்ச்சியில் பங்குபெற விருப்பமா?.
ஆத்துமா ஆதாயத்துக்கு ஒப்புக்கொடு…