நான் சொன்ன உபதேசத்தினாலே இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்
You are already clean because of the word which I have spoken to you. (John 15:3)
John 13:10; John 17:17; Act20:32; Ephesians 5:26; 1 Thessalonians 2:13; 1Peter 1:22; Deuteronomy 12:28; Psalms 119:9; Proverb 15:31.
நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். (யோவான் 15:3)
யோவான் 13:10; யோவான் 17:17; அப்போஸ்தலர் 20:32; எபேசியர் 5:26; 1தெசலோனிக்கேயர் 2:13; 1பேதுரு 1:22; உபாகமம் 12:28; சங்கீதம் 119:9; நீதிமொழிகள் 15:31.
வசனமே தூய்மைபடுத்தும்:
விவ்லியம் தேவனுடைய வார்த்தை என்பது மட்டுமல்ல, தேவனுடைய மனதை காண்பிக்கும் கண்ணாடி. அவரின் இருதயத்திலுள்ள பிரகாரம் மனுகுலம் உருவாகவேண்டுமென்பதுவே அவரின் மெய்யான விருப்பம். அதற்கேற்றாற்போல் நியாயபிரமாணங்களையும், தீர்க்கதரிசனங்களையும் கொடுத்தார். அதன்பின்பு தேவனுடைய வார்த்தையாகிய இயேசுவை தந்தார். நியாயபிரமாணங்களும் தீர்க்கதரிசனங்களும் சுத்திகரிப்புக்கு நேராகவே வழிநடத்தியது. அதுபோல கிறிஸ்துவின் வசனங்களும் சுத்திகரிக்கபடுதலுக்கு நேராகவே வழிநடத்தும். நியாயபிரமாணத்துக்கும், தீர்க்கதரிசனங்களுக்கும் கீழ்படியாததினால் கிறிஸ்துவை கொடுத்தார். கிறிஸ்துவுக்கு கீழ்படியவில்லையெனில் இனி வேறு வார்த்தை கிடையாது. அக்கினி தழலே வைக்கப்பட்டுள்ளது. அன்பின் வார்த்தைக்கு கீழ்படிந்து சுத்திகரிக்கபட மனமில்லாத மனுகுலம் அதன் வலியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
கர்த்தருடைய வார்த்தை நம்மை எப்படி சுத்திகரிக்கின்றது என்று எபிரேயர் 4:12 ல் திட்டமாக கூறப்பட்டுள்ளது. வாக்குதத்தம் பெற்ற யோசேப்பு அந்த வாக்குதத்தத்தினால் புடமிடபட்டதை மறந்துபோக வேண்டாம். வசனமானது ஒருவனை அதற்கேற்றாற்போல் உருவாக்க நினைத்தால் அது அவனை கொன்று உயிர்ப்பித்து புடமிட்டு பிற்பாடே பொன்னாக நிறுத்தும்.
அன்றாடம் விவிலியத்தை வாசிக்கும் பழக்கம் அவசியமானது. பிரசங்கத்திற்காக வாசிப்பதல்ல, தான் உருவாக்கப்படதக்கதாய் வாசிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டின் இராஜாக்களின் வரலாற்றில் தேவனுடைய இருதயத்தின் விருப்பம் என்ன என்பதை குறித்து தெளிவாய் அறியமுடிகின்றது. இன்றைய கிறிஸ்தவமாகிய அவருடைய ஜனத்தினிடையேயும் அதேபோலவே தம் இருதயத்தின் விருப்பங்களை வெளிபடுத்துகின்றார்.
சுத்திகரிக்கப்படுதலுக்காக மட்டுமே விவிலியம். அதன்பின்பே மகிமைப்படுதலுக்கானதாய் அது மாறும். ஏசாயா 55:10,11.
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரேயர் 4: 12-16.