நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன், இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்.
Whether He is a sinner or not I do not know. One thing I know: that though I was blind, now I see. (John 9:25)
Jn5:11; 1Cor2:15; 1Thes5:15; Pr17:13; Pr20:22; Pr24:17; Mt5:44; Ro12:17-21; 1Cor6:7; 1Pet2:22,23; 1Pet3:9.
அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது, நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன், இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான். (யோவான் 9:25)
யோவான் 5:11; 1கொரிந்தியர் 2:15; 1தெசலோனிக்கேயர் 5:15; நீதிமொழிகள் 17:13; நீதிமொழிகள் 20:22; நீதிமொழிகள் 24:17; மத்தேயு 5:44; ரோமர் 12:17-21; 1கொரிந்தியர் 6:7; 1பேதுரு 2:22,23; 1பேதுரு 3:9.
தன் நிலையில் தான் நிற்றல்.
ஒரு குருடனாயிருந்தவன் கல்வி அறிவு அற்றவனாகவும், வாழ்க்கையின் நெழிவு, சுழிவுகளை அறியாதவனாகவும் இருந்திருக்க கூடும். அப்படிபட்ட இவன் தனக்கு செய்யப்பட்ட நன்மையைக் குறித்து மட்டுமே நினைவில் கொண்டிருந்து அதிலே உறுதியாய் நின்றான்.
தனக்கு நன்மை செய்தவருக்கு எள்ளளவும் தீமை செய்யலாகாது என்றும், தனக்கு நன்மை செய்தவர் மீது யார் எப்படிபட்ட குற்றம் சுமத்தினாலும் தான் அவர்மீது ஒரு குற்றமும் சுமத்தலாகாது என்றும், தனக்கு நன்மை செய்தவர் நல்லவரா கெட்டவரா என்று ஆராயலாகாது என்றும் தீர்க்கமான முடிவில் இருந்தான்.
குறை சொல்லுகிறவர்களுடன் சேர்ந்து குறை சொல்லுவது பாவம். குற்றமற்றவர்கள் மீது குற்றம் சுமத்தும்படி நினைப்பதும், செயல்படுவதும், துணை நிற்பதும் பாவம்.
தனக்கு கிடைத்த நன்மையில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது இரட்சிப்பில் , ஆசீர்வாதங்களில், நற்கிரியைகளில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் வக்கீல்களும் அல்ல, நீதிபதிகளும் அல்ல. நாம் கிறிஸ்துவை நம்பி அவர் கொடுக்கும் நன்மைக்காய் ஓடுகிறவர்கள். அதில்தான் கவனம் செலுத்த வேண்டுமேயன்றி சம்பந்தமில்லாதவர்களுடனும், குறை சொல்லுகிறவர்களுடனும் உட்கார்ந்து சங்கீதம் 1:1,2 ன்படி வாழ்வது ஆபத்தாகவே முடியும்.
நமது அரசாங்கத்தையும், நமக்கு மேலான அதிகாரத்திலுள்ளவர்களையும் குறித்து குறை சொல்லுகிற கூட்டத்தோடு இணைவதும், அவர்களுக்கு உதவியாய் நிற்பதும் ஆசீர்வாத நீரூற்று வற்றிபோக காரணமாகும்.
நேர்வழியில் செல்… நேர்மறையாய் சிந்தி…..
கர்த்தாவே எங்களுக்கு நீர் செய்துள்ள அதிசயமான கிரியைகள் மீது எங்கள் கவனத்தை செலுத்ததக்கதாக எங்கள் சிந்தையை ஒருமுகப்படுத்தும்.