நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு நிலைத்திருக்கிறதுபோல

நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு நிலைத்திருக்கிறதுபோல

If u keep My commandments,u will abide in My love,just as I have kept My Father’s commandments.  (John 15:10)

John 14:15,31; Matthew 3:15-17; 1Corinthians 7:19; 1 Thessalonians 4:1; Hebrew 7:26; Hebrew 10:5-10; 2Peter 2:21; 1John 2:1,2,5; 1John 5:3; Revelation 22:14.

 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.  (யோவான் 15:10)

யோவான் 14:15,31; மத்தேயு 3:15-17; 1கொரிந்தியர் 7:19; 1தெசலோனிக்கேயர் 4:1; எபிரெயர் 7:26; எபிரெயர் 10:5-10; 2பேதுரு 2:21; 1யோவான் 2:1,1,5; 1யோவான் 5:3; வெளி 22:14.

கற்பனைகளுக்கு கீழ்படிதல்:

விவிலியம் நமது கரங்களில் தரப்பட்டுள்ள தேவனுடைய ஏற்பாடு. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரையிலும் அவரின் கற்பனைகளுக்கு கீழ்படிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கீழ்படியாமையினால்தான் ஆதிபாவம் உண்டானது. தொடர் கீழ்படியாமையினால் மீதிபாவம் உண்டாகின்றது. கீழ்படியும்போது ஆசீர்வாதமும், கீழ்படியாதிருக்கும்போது சாபமும் உண்டாவதை விவிலியத்தில் காண்கின்றோம்.

இயேசுகிறிஸ்து பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்தார். அதனால்தான் நியாயபிரமாணத்தின் நிறைவேறுதலாக அறியப்பட்டார். அவர் தந்தையின் கற்பனைகளுக்கு சிலுவையின் மரணம் வரையிலும் கீழ்படிந்தார். அதைப்போலவே இயேசுகிறிஸ்துவின் கட்டளைகளுக்கு கீழ்படியவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நமது மரணம் வரையிலும் அவரின் கற்பனைகளுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். அப்பொழுதுதான் பிதா தாம் விரும்பும் தேவபக்தியுள்ள சந்ததியை காண முடியும்.
இயேசுகிறிஸ்து போதித்தவைகள் ஒன்றும் அவருடையதல்ல. அவரை அனுப்பிய பிதாவினுடையது. இயேசுகிறிஸ்து போதித்த எந்த கட்டளைகளும் தேவன் கொடுத்த பிரமாணங்களுக்கு எதிரானதல்ல.

சடங்கு சார்ந்த கட்டலளைகள் மாத்திரமே பவுலால் புறஜாதியாருக்கு மாற்றியமைக்கப்பட்டது. இயேசுகிறிஸ்து பிரமாணங்களின் ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போவதில்லை என்றே கூறியுள்ளார். எனவே இயேசு போதித்தவைகளை ஏற்றுக்கொண்டு அதற்கு கீழ்படிந்து அதற்கேற்றாற்போல வாழும்போதுதான் தெய்வீக அன்பு பரிணமிக்கும்.
கீழ்படியும் மனமுள்ளவன் கட்டளைகளை பாரம் மிகுந்தவையாய் பாரான். கைக்கொள்ளுவது ஒன்று மட்டுமே அவனின் பங்காயிருக்கும்.

பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம். 1யோவான் 3:21-24.

ADD YOUR COMMENT

Powered By Indic IME