நான் உன்னை அவனுடனேகூட தோட்டத்தில் காணவில்லையா?

நான் உன்னை அவனுடனேகூட தோட்டத்தில் காணவில்லையா?

One of the servants said,Did I not see you in the garden with Him? (John 18:26)

2 Chronicles 16:9; Job 7:8; Psalm 34:15; Psalm 94:9; Psalm 139:16; Proverb 15:3; Isaiah 49:18; 1Corinthians 2:9; Hebrew 4:13.

பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான். (யோவான் 18:26)

2நாளாகமம் 16:9; யோபு 7:8; சங்கீதம் 34:15; சங்கீதம் 94:9; சங்கீதம் 139:16; நீதிமொழிகள் 15:3; ஏசாயா 49:18; 1கொரிந்தியர் 2:9; எபிரெயர் 4:13.

பேதுருவைக் கண்ட கண்கள்:

இயேசுவோடுகூட மரிக்கவும் ஆயத்தம் என்று கூறிய பேதுரு கபட நாவு உடையவனாக நான் அவரோடு இருக்கவில்லை என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டார். எதிராளிகள் தன்மீது கண்ட குற்றத்தை மறைப்பதற்கு முயல்கிறார் பேதுரு. இயேசுவோடுகூட இருந்ததையும், அவரோடுகூட பணி செய்ததையும், அவருடைய செய்தியை கிராமந்தோறும் எடுத்துச் சென்றதையும் யாவரும் அறிவார்கள். உலகத்திற்கு முன்பாக வெளிச்சமாயிருந்த பேதுருவை இருளில் இருந்த யாவரும் எளிதாக அடையாளம் கண்டுக் கொண்டனர். பேதுருவை பார்த்துக்கொண்டிருக்கும் ஆயிரம் கண்கள் முன்னிலையில் பேதுரு எப்படி மறைந்து வாழ முடியும்? அரங்கத்துக்கு வந்தபின்பு ஒளிவு மறைவுகளினால் ஒரு பிரயோசனமுமில்லை.

பேதுருவைக் கண்ட கண்களில் மணலையும், தூளையும் வாரி இறைத்தாலும் அவர்கள் உள்ளம் பேதுருவைக் கண்டதைக் குறித்து சாட்சிக் கொடுக்கும். நமது கண்கள் தூய்மையானதாகவும், பிறரின் கண்கள் அசுத்தமானதாகவும் இருக்கலாம். இதனால் என்னைப் பார்க்கும் கண்கள் அசுத்தமானவைகள் என்று முடிவு கட்ட முடியாது. பிசாசானவன் தேவனுடைய மக்கள் மீது குற்றம் சுமத்தும் படியாக அலைந்து திருந்துக் கொண்டிருக்கையில் நம்மில் தவறொன்றும் காணப்படாதபடிக்கு நடந்துக் கொள்வதே உசிதமானது.

பந்தய சாலையில் ஓடும்போது நம் கண்கள் சென்று சேரவேண்டிய இடத்தை மட்டுமே நோக்கும். ஆனால் மைதானத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கண்களும் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கும். நம்மை காணும் கண்கள் முன்பாக நாம் வெளியரங்கமாய் நடந்துக் கொள்ள வேண்டும். உலகம், மாமிசம், பிசாசு போன்றவைகள் நம்மை பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. ஏன், நமது ஆண்டவரும் நம்மை பார்த்துக் கொண்டேயிருக்கின்றார். பரலோகத்திலிருந்து மனுபுத்திரர் யாவரையும் அவரது கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றது. அவருக்கு முன்பாக மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை.

நாம் கிறிஸ்துவுக்குள் வெளிச்சமாக இருப்பதினால் எல்லா விஷயங்களிலும் வெளியரங்கமாயிருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகின்றார்.

வெளிப்படைதன்மையோடு வாழ நம்மை ஆயத்தம் செய்வோம்.

சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்.

இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல் இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம். நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கும். கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;

பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம். 2கொரிந்தியர் 5:10-16.

ADD YOUR COMMENT

Powered By Indic IME