நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா

நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?

He said to them,Do you know what I have done to you? (John 13:12)

Ezekiel 24:19,24; Matthew 13:51; Matthew 20:25; Mark 4:13; John 13:5,7; Acts 10:17; 1John 2:5,6.

அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? (யோவான் 13:12)

எசேக்கியேல் 24:19,24; மத்தேயு 13:51; மத்தேயு 20:25; மாற்கு 4:13; யோவான் 13:5,7; அப்போஸ்தலர் 10:17; 1யோவான் 2:5,6.

நான் செய்ததை செய்க:
கர்த்தராகிய இயேசு பிதாவாகிய தேவனால் அனுப்பப்பட்டு இந்த பூமிக்கு வந்தார். பிதா தம் குமாரனை அனுப்பும்போது எதை செய்ய வேண்டுமோ அதை செய்யவும், போதிக்கவுமே கட்டளை கொடுத்திருந்தார். இயேசுகிறிஸ்துவும் தமது ஊழியகாலத்தில் பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதையே தமது நோக்கமாகக் கொண்டிருந்தார். பிதா செய்வதை கண்டு அதன்படியே செய்தார். பிதா பேசியதைக் கேட்டு அதன்படியே பேசினார். இயேசுகிறிஸ்துவின் வெற்றியே அதில்தான் அடங்கியிருந்தது. இயேசுகிறிஸ்துவினால் ஊழியம் செய்ய அனுப்பப்பட்டுள்ள ஊழியகாரர்களும் இயேசு என்ன சொல்லியுள்ளாரோ அதையே பேச வேண்டும். இயேசு என்ன செய்துள்ளாரோ அதையே செய்ய வேண்டும். அதுதான் ஊழியகார்களுக்கு அவர் தந்துள்ள கட்டளையாகும். ஊழியத்தின் வெற்றியும் இதில்தான் அடங்கியுள்ளது.

ஒருகுடும்பத்தில் குடும்ப தலைவன் என்ன விரும்புகிறாரோ என்ன சொல்லுகிறாரோ என்ன செய்கிறாரோ அதையே பின்பற்றி செல்லும் மனைவியும் பிள்ளைகளுமாகக் காணப்படுவார்களெனில் அக்குடும்பத்தில் வெற்றி தமதாகும்.

நிறுவனங்களும் அதுவே தான். சபைகளிலும் போதகரின் பேச்சை கேட்டு அதன்படி செயல்படும் மூப்பர்களும், விசுவாசிகளுமாகக் காணப்படுவார்களெனில் அங்கே வெற்றி உண்டு.

அவர் பேசியபடி பேசுதலும், அவர் நடந்தபடியே நடத்தலும், அவர் செய்தபடியே செய்வதுமே நம்மை இயேசுவை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட ஏதுவாகின்றது. ஊழியகாரர்கள் தாங்கள் கிறிஸ்துவை பின்பற்றுவதுபோல மூப்பர்கள் ஊழியகாரர்களை பின்தொடர்கிறார்கள். மூப்பர்களை விசுவாசிகள் பின்தொடர்கிறார்கள். யாவரும் இயேசுவை பின்பற்றுகிறவர்களாகிறார்கள்.

பின்னிட்டு திரும்புவதற்காக அல்ல, பின் செல்வதற்காகவே அழைக்கப்பட்டுள்ளோம்.

சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிலிப்பியர் 3:17-20.

Comments
  1. I.VIJAYAKUMAR

    Kindly please send living water every day message in what’s app!

    • Aanmigam

      Type “DAILY GODS WORD” and Send your contact number to mobile no : 8610889814 through whatsapp or normal message.

ADD YOUR COMMENT

Powered By Indic IME