அவனோ: நான்தான் அவன் என்றான்.
Some said,This is he.Others said,He is like him. He said,I am he. (John 8:8,9)
Ru1:19; 1Sam2:8; 1Sam10:11; 1Sam21:11; Jn9:19; Act9:21.
அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். (யோவான் 9:8)
சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான். (யோவான் 9:9)
ரூத்1:19; 1சாமுவேல் 2:8; 1சாமுவேல் 10:11; 1சாமுவேல் 21:11; யோவான் 9:19; அப்போஸ்தலர் 9:21.
கேள்வி எழுப்பும் மக்கள். அற்புதங்கள் பார்ப்பதற்கும், கேள்விபடுவதற்கும் இனிதாயிருக்கும். அனுபவிப்பதற்கு மிகவும் ஆச்சரியமானதாயிருக்கும். ஆனால் நம்புவதற்கோ சற்று கடினமாகவேயிருக்கும். ஏன் இந்த அற்புதம் நடந்தது? எப்படி நடந்தது? நடத்தியவரின் ஒழுங்குமுறை என்ன? போன்ற பல கேள்விகளை கேட்டு அற்புதங்களை பெற்றவர்களையும், பார்த்தவர்களையும், கேட்டவர்களையும்குழப்பி விடும்படியான அதிமேதாவிகள் அன்றும் இருந்தார்கள், இன்றும் அதிகமாயிருக்கிறார்கள்.
கர்த்தரின் ஊழியத்தை செய்கிறோம் என்று கூறுபவர்கள் தங்களுக்கு தாங்களே இறையியல்வாதிகள், தத்துவவாதிகள், உளவியல் வல்லுநர்கள் என்று கூறி, பற்பல கேள்விகளால் தங்கள் இருதயங்களை நிறைத்து அவமானகரமான உபதேசங்களை நுரைதள்ளுகிறார்கள்.
நம்வாழ்வில் தேவன் செய்யும் அற்புதங்களானது நமக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பை உறுதிபடுத்துகிறது. அதற்கு பிறர் சான்றுபகர வேண்டியதில்லை. என்றைக்கு பாவம் உலகில் வந்ததோ அன்றே கேள்விகளும், தாறுமாறான விடைகளும் உண்டாகிவிட்டன. தேவனுடைய இராஜ்யம், தேவனுடைய சபை, தேவனுடைய பிள்ளைகளின் குடும்பம் கேள்விகளால் நிரம்பியதல்ல, வேள்விகளால் நிரம்பியது ஆகும். உங்கள் மனதில் உள்ள கேள்வியை துறந்துவிட்டு அற்புதங்களை எதிர்பாருங்கள்.
கர்த்தாவே நாங்கள் கேள்விகளால் நிறைந்திருக்கும்படியல்ல, உம்மை ஏற்றுகொள்ளும்படியாகவே அற்புதங்களை எங்களுக்கு தந்துள்ளீர்.