இங்கே நான்கு விஷயங்கள் உள்ளன.
திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். (யோவான் 2:3)
1இராஜாக்கள் 2:20f; சங்கீதம் 104:15; பிரசங்கி 10:19; ஏசாயா 24:11; ஏசாயா 55:1; மத்தேயு 26:28f; லூக்கா 4:23; யோவான் 11:3; பிலிப்பியர் 4:6.
இங்கே 4 விஷயங்கள் உள்ளன.
1. இயேசு இருந்த வீட்டில் குறைவு உண்டாயிற்று. குறைவு வரும். ஆனாலும் அவர் குறைவை நிறைவாக்குவார்.
2. இயேசுவின் தாய் குறைவை இயேசுவிடம் தெரிவிக்கின்றார். இது மன்றாட்டு ஆகும்.
அவருக்கு நெருங்கிய எவராயினும் குறைவுபட்டோரின் குறைவுகளை இயேசுவிடம் கொண்டு போகலாம்.
இதனால் தாய் மரியாளிடம் நாம் நமது குறைவுகளை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
3. ஏன் இயேசுவிடம் தெரிவிக்கபட்டது? இயேசுவின் நற்கிரியைகளையும், அவரின் தெய்வீக ஆற்றலையும், அவருக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பையும், மனுக்குலத்தின் குறைவுகளை செப்பனிடக்கூடியவர் இயேசுவே என்றும் அறிகின்ற அறிவும் இருந்தால் மட்டுமே அவரிடம் குறைவை தெரிவிக்க இயலும்.
4. திராட்சை குறைவு எதனை படிப்பிக்கின்றது?
– குறைவடையும்போது தான் நிறைவின் மகிமையை புரிந்து கொள்கின்றோம்.
– குறைவு நமது செயல்களை மறு பரிசீலனை செய்யும் படியாய் தூண்டுகிறது.
– குறைவு நம்மை கிறிஸ்து என்ற பரிபூரணத்துக்கு நேராய் இட்டு செல்கின்றது.
– திராட்சையானது மகிழ்ச்சி, களிகூருதல், திருப்திக்கு அடையாளம். இக்குறைவு நம்மை அவிசுவாசத்துக்கு கொண்டு செல்ல இடம் தரலாகாது.