நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
As You sent Me into the world, I also have sent them into the world. (John 17:18)
John 7:29; John 10:36; John 20:21; Matthew 23:34; 1Corinthians 3:23; 2 Corinthians 5:20; Ephesians 3:7; Philippians 2:25.
நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். (யோவான் 17:18)
யோவான் 7:29; யோவான் 10:36; யோவான் 20:21; மத்தேயு 23:34; 1கொரிந்தியர் 3:23; 2கொரிந்தியர் 5:20; எபேசியர் 3:7; பிலிப்பியர் 2:25.
உங்களை அனுப்புகிறவர்:
அனுப்புதல் என்பதின் மூலச்சொல்தான் அப்போஸ்தலர் ஆகும். பிதா தமது குமாரனை அனுப்பியதுபோல கிறிஸ்துவும் தமது சீஷர்களை அனுப்புகிறார். பிதா கிறிஸ்துவை உலகத்திற்குள் அனுப்பினார். குமாரனும் சீஷர்களை இந்த உலகத்திற்குள் அனுப்புகிறார். இந்த செயல்பாடு சில வித்தியாசமான உண்மைகளை நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
பிதா தமது குமாரனையே அனுப்பினார். குமாரனும் தமது சீஷர்களையே அனுப்புகிறார்.
பாவம் நிறைந்த அக்கிரமம் நிறைந்த , சாத்தானின் ஆளுகையுள்ள , ஆபத்துக்கொண்ட உலகிற்குள் அனுப்பப்பட்டார். அதுபோல சீஷர்களும் கிறிஸ்து அனுப்பப்பட்ட அதே தன்மைகள் கொண்ட உலகிற்குள் கிறிஸ்துவால் அனுப்பப்படுகிறார்கள். ஆடுகள் ஓநாய்களுக்குள்ளே அனுப்படுவதைபோல.
பிதா தமது காரியமாய் மட்டுமே தமது குமாரனை அனுப்பினார். குமாரன் தன் நலத்தின்மேல் கரிசனை கொள்ள அல்லாது பாவிகள் மேல் கரிசனை கொள்ள அனுப்பப்பட்டார். அதுபோல குமாரனும் தமது காரியமாகவே சீஷர்களை அனுப்பினார். சீஷர்கள் தங்கள் நலத்தின்மேல் கரிசனை கொள்ளாது பாவிகள்மேல் கரிசனை கொள்ளவே அனுப்பப்படுகிறார்கள்.
பிதா தமது குமாரனை தம்மிஷடபடிதான் பயன்படுத்துவார். அதுபோலவே குமாரனும் சீஷர்களை தம்மிஷடபடியே பயன்படுத்துவார்.
பிதா தமது குமாரனின் செயல்கள் செம்மையானதாக இருக்கிறதா என்றுதான் கவனிப்பாரேயன்றி குமாரன் மரணமடைவதை பற்றி கவனத்தில் கொள்வதில்லை. அதுபோலவே சீஷர்களின் மரணம் அல்ல அவர்களின் கிரியைகள் செம்மையானதாக இருக்கிறதா என்றுதான் கிறிஸ்துவும் கவனிப்பார்.
குமாரனின் முடிவை குறித்து பிதாதான் முடிவு செய்கிறார். அதுபோல சீஷர்களின் முடிவை குறித்து குமாரனே முடிவு செய்கிறார். சீஷர்களல்ல.
இன்னும் பல உண்மைகள் உண்டு.
தேவனுடைய பணியை செய்ய அனுப்பப்பட்ட தேவனுடைய மனிதர்கள் தேவ ஜனத்துக்காக தேவனுடைய வழியில் கிறிஸ்துவை போல செயல்படுகிறவர்களே சீஷர்கள் ஆவர்.
ஒவ்வொரு இரட்சிக்கப்பட்ட விசுவாசியும் கூட ஏதொவொரு விதத்தில் அவரால் அனுப்பப்படுகிறவர்களே.
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவாகள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். ரோமர் 10: 11-17.