நாத்தான்வேல்

நாத்தான்வேல், நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாக கூடுமா?

அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். (யோவான் 1:46)

யோவான் 7:41,52; லூக்கா 4:16,28,29; மத்தேயு 21:11; மத்தேயு 26:69; மாற்கு 10:27; லூக்கா 7:22.

நாசரேத்து என்றால் the guarded one என்று பொருள்.

நாசரேத் குறித்து தீர்க்கதரிசனங்கள் கூறப்படாததினால் நாசரேத்திலிருந்து மேசியா வரமுடியாது என்றான்.

நாசரேத் கலிலேயாவில் உள்ள புறஜாதி பட்டணங்களில் ஒன்றாயிருந்ததினால் இங்கிருந்து மேசியா வர முடியாது என்றான்.

ஆனால், இயேசு நாசரேத்தில் தான் வளர்ந்தார்.
நாசரேத்தூரானாகிய இயேசு என்றும் பெயர் பெற்றார்.

நாமும் புறக்கணிக்கபட்டவர்களாயிருப்பினும் நம்மிலிருந்து தான்
– ராஜாக்களை தோன்ற பண்ணுவார்.
– நம்மை சிங்காரமாக வைக்கிறார். ஏசாயா 61:3
– நம்மை ஆசாரியர்களாக மாற்றுகிறார். 1 பேதுரு 2:9
– நம்மை தேவனுடைய ஜனமாகவும்,மகன் மகளாகவும் மாற்றினார். யோவான் 1:12
– நம்மை இஸ்ராயேலரோடு நன்மையை சுதந்தரிக்க வைக்கிறார்.

எனவே,
– தீமை செய்யும் நீயே நன்மை செய்பவனாக மாறுவாய்.
– கொடுக்க இயலாத – உதவ இயலாத நீயே கொடுக்கிறவனாகவும், உதவுகிறவனாகவும் மாறுவாய்.
-பெலனற்ற நீயே பெலனுள்ளவனாய் மாறுவாய். இதுதான் அவரின் கிரியை.

ADD YOUR COMMENT

Powered By Indic IME