நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்

நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்

If anyone loves Me,keep My word;Father love him,We will come to him and make Our home with him. (John 14:23)

John 14:17; Romans 8:9-11; 1John 2:24; 1John 4:4,15,16; Revelation 3:20,21; Revelation 7:15-17; Revelation 21:22; Revelation 22:3; Psalm 90:1; Psalm 91:1; Isaiah 57:15.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். (யோவான் 14:23)

யோவான் 14:17; ரோமர் 8:9-11; 1யோவான் 2:24; 1யோவான் 4:4,15, 1,6; வெளி 3:20,21; வெளி 7:15-17; வெளி 21:22; வெளி 22:3; சங்கீதம் 90:1; சங்கீதம் 91:1; ஏசாயா 57:15.

உன்னோடு தங்குவேன்:
கர்த்தராகிய இயேசு தமது தந்தையோடும், பரிசுத்த ஆவியோடும் இணைந்து தங்குவதாக சீஷர்களுக்கு வாக்களிக்கின்றார். கிறிஸ்துவை நேசித்து அவருடைய வசனங்களை தங்களில் பத்திரப்படுத்தி அதன்படி வாழ்கின்றவர்களில் கிறிஸ்து வாசம் பண்ணுகிறார். கிறிஸ்து வாசம் பண்ணுவோரில் பிதாவும், பரிசுத்த ஆவியும் வாசம் செய்கின்றார்கள்.

மாம்சத்தில் வந்த இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படுகிறோம். ஆவியில் வெளிப்பட்ட கிறிஸ்துவை கொண்டிருந்து அவரோடு இணைந்து வாழ்கின்றோம். மனிதரிடத்தில் ஜீவிப்பதற்காக வார்த்தையானவர் மாம்சமானார். மனிதனுக்குள் ஜீவிப்பதற்கு மாம்சமானவர் ஜீவனானார், உயிர்ப்பின் ஆவியானார்.

கிறிஸ்துவையும் பிதாவையும் நேசிக்கும் அன்பும், அவரின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் கீழ்ப்படிதலும் நமக்குள் அன்பையும் கீழ்ப்படிதலையும் உருவாக்குகின்றது. அவரால் நமக்குள் உருவாக்கப்பட்டுள்ள அன்பும் கீழ்ப்படிதலும் நிலைத்திருந்தால் மட்டுமே தேவத்துவம் நமக்குள் வெளிப்படும். அந்த அன்பையும் கீழ்படிதலையும் நாம் தோலைத்துவிட்டு கோபமும் முரட்டுகுணமும் பிடிவாதமும் உடையவர்களாக மாறுவோமானால் நமக்குள் கசப்பும் வெறுப்பும் பகையும் உண்டாகி அவிசுவாசம் பிறப்பிக்கப்படும். அவிசுவாசம் சந்தேகத்தை பிறப்பிக்கும். சந்தேகம் நிலையாமையை கொண்டுவரும்.

அன்பானவர்களே, தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவிக்கும் தாங்கள் சார்ந்துள்ள சபை போதகருக்கும் முற்றிலுமாய் கீழ்படிந்து அன்புகாட்டி கிறிஸ்துவை உடையவர்களாய் காணப்படுவோம்.
அவர் நமக்குள் இருப்பாரானால் அவர் மட்டுமல்ல நாமும் பெரியவர்களாயிருப்போம்.

மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். 1யோவான் 4:3-8

ADD YOUR COMMENT

Powered By Indic IME