நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால்

For if our heart condemns us, God is greater than our heart, and knows all things. (1John 3:20)

John 8:9; Acts 5:33; Romans 2:14,15; 1Corithians 4:4; 1Corithians 14:24,25; Titus 3:11; Job 27:6.

நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். (1 யோவான் 3:20)

யோவான் 8:9; அப்போஸ்தலர் 5:33; ரோமர் 2:14,15; 1கொரிந்தியர் 4:4; 1கொரிந்தியர் 14:24,25; தீத்து 3:11; யோபு 27:6.

நமது இருதயம்.

எல்லா தீர்ப்புகளும் தேவனுடைய கற்பனைகளின்படிதான் நடந்தேறுகின்றது. நியாயபிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பும்கூட தீர்ப்புகள் யாவும் தேவனுடைய வார்த்தைகளின்படியே நடந்தது. நியாயபிரமாணம் கொடுக்கப்பட்ட பின்பு அதன்படியாகவே தீர்ப்பிடப்பட்டது. நியாயபிரமானத்தைப் பெற்றுக்கொள்ளாத புறஜாதியாரும் தங்கள் தங்கள் இருதயத்தின் பிரமாணங்களின்படியே தீர்ப்பிடப்படுவதாக விவிலியம் கூறுகின்றது. இத்தியாதி சட்ட அமைப்புகள் யாவும் நமது மனசாட்சியோடு இணைந்து உள்ளது. நியாயபிரமாணம் இல்லாதவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை உள்ளடக்கிய மனசாட்சியே காணப்படுகிறது. மனிதனை உண்டாக்கியபோதே மனிதனுக்குள் மனசாட்சியை வைத்து அந்த மனசாட்சியில் இது நல்லது இது தகாதது என்ற பிரமாணத்தை வைத்திருந்தார் தேவன். பாவம் செய்து நன்மை தீமை அறிய செய்யும் கனியை உண்டதினிமித்தம் இந்த நல்லது கெட்டது என்பது மேலும் விழித்துக் கொண்டது. நல்லது இது கெட்டது இது என்று அறியும் திறனை கொண்டுள்ள ஒரு மனிதன் கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ விரும்பவில்லையெனில் அவன் மனசாட்சியே – அவனின் இருதயமே அவனை குற்றவாளியாக்கும்.

வாத்தையினாலும் நாவினாலும் அன்புகூருவதை விட்டு விட்டு கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூருவதை பிடித்துக்கொண்டு வாழ விரும்பாதவர்களின் இருதயமே அவர்களுக்கு தீர்ப்பிடும் தீர்ப்புகளமாக மாறுகின்றது. நாம் செய்யும் எந்த செயலும் நமது மனசாட்சியால் ஆராயப்படுகிறது என்பதை நாமறிவோம். ஒரு செயலை செய்யும்போது இல்லாவிட்டாலும் அமைதியாய் இருக்கும்போதும், அதேபோலொத்த செயலை பிறிதொருவர் செய்வதை காணும்போதும், நல்ல நித்திரை செய்ய பிரயாசப்படும்போதும், கர்த்தருடைய வாக்கியங்களை வாசிக்கும்போதும் நாம் செய்த செயல் நல்லதா கெட்டதா என்ற ஒரு போராட்டம் நமக்குள் உண்டாகின்றது. ஆகையினால் எந்த செயலும் பேச்சும் நமது இருதயத்தாலோ மனசாட்சியாலோ பரிசீலனை செய்யப்பட நாம் நம்மை ஒப்புக்கொடுத்து மாசில்லாத வாழ்வுக்குரியவர்களாயிருப்போமாக.

நமது அனைத்து செயற்பாடுகளும் நமது மனக்கண்னாடியினால் கண்காணிக்கப்படுகின்றது. நம் இருதயம் நம்மை குற்றப்படுத்தாதபடிக்கு எச்சரிக்கையாக வாழ்வோமாக. நம்மிலே இந்த போராட்ட,ம் வருமானால் அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்போமாக. பிறரால் குற்றம் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு செயலை செய்தும் அதை குறித்த தெளிவு நமது மனசாட்சியில் காணப்படாவிட்டால் நமது இருதயம் இருளடைந்துவிட்டது என்றே பொருளாகும்.

கேள்வி. தவறான செயலை செய்தும் அது சரியான செயல் என்று சாதிப்பதை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?.

நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன். அப்போஸ்தலர் 24:16.

வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். 2கொரிந்தியர் 4:2.

ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். 1தீமோத்தேயு 4:1.

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 1தீமோத்தேயு 1:5.

ADD YOUR COMMENT

Powered By Indic IME