மன்னித்து, நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறார்.

மன்னித்து, நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறார்.

forgive us our sins and to cleanse us from all unrighteousness. (1John 1 :9)

Psalms 19:12; Psalms 51:2; Jeremiah 33:8; Ezekiel 36:25; Ezekiel 37:23; 1Corinthians 6:11; Ephesians 5:26,27; Titus 2:14.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:9)

சங்கீதம் 19:12; சங்கீதம் 51:2; எரேமியா 33:8; எசேக்கியேல் 36:25; எசேக்கியேல் 37:23; 1கொரிந்தியர் 6:11; எபேசியர் 5:26,27; தீத்து 2:14.

சுத்திகரிக்கும் தேவன்.

பாவங்களை அவர் முன்னிலையில் அறிக்கையிடும்போது அந்த பாவங்களை மன்னித்து அநியாயங்களையும் அக்கிரமங்களையும் அகற்றி சுத்தமாக்குகிறார். இப்பொழுது அழுக்கடைந்த அசுத்த மனிதனாக அல்லாது சுத்திகரிக்கப்பட்ட மனிதனாக காணப்படுகின்றான். இருளடைந்து காணப்பட்டவன் வெளிச்சமாயிருக்கின்றான்.

பாவத்துக்கு காரணமே அநியாயங்களும் அக்கிரமங்களும் என்பது ஒரு கருத்து. இதன் அடிப்படையில் பார்க்கும்போது கீழ்படியாமையினாலும் முரட்டுகுணங்களினாலும் பாவம் செய்து பாவிகளாகின்றோம் என்று கருதலாம்.

இன்னொருவிதத்தில் பார்க்கும்போது பாவத்தின் விளைவினால் அநியாயமும் அக்கிரமங்களும் உண்டாகி தேவனுக்கு அந்நியர்களாகின்றோம் என்று கூறலாம். பாவம் செய்ய செய்ய தேவனுடைய நீதி, நியாயங்களுக்கு எதிரான மனநிலையுடையவர்களாகி கலகம் விளைவிக்கிறவர்களாகின்றோம்.

எப்படியாயினும் பாவத்தை மன்னித்து அநியாயங்களினாலும் அக்கிரமங்களினாலும் உண்டான அழுக்குகளைக் கழுவி பரிசுத்தம் பண்ண அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

மன்னிப்பதும், சுத்திகரிப்பதும் தேவன் செய்துள்ள மகத்தான திருப்பணியாகும். பிரமாணங்களைக் கொடுத்து பாவத்துக்கு தண்டனை தருகின்றவரே அதே பிரமாணத்தை நிறைவேற்றின இயேசுவினிமித்தம் பாவங்களை மன்னிக்கிறார். சட்டத்தின் பிரகாரமாக கர்த்தராகிய இயேசுவினிமித்தம் மன்னிப்பு உண்டாகின்றது. மன்னிப்பு என்றால் விட்டுவிடுதல், வெளியேற அனுமதித்தல், விடுதலையாகி செல்ல ஒத்துக்கொள்ளுதல் என்று பொருள்படும். பாவம் செய்தவனின் மேலிருந்த தண்டனையை அகற்றி கிறிஸ்துவினிமித்தம் விடுவித்து அனுப்புகிறார்.

சுத்திகரித்தல் என்பது பாவம் மன்னிக்கப்பட்டவனின் மேலுள்ள அழுக்குகளும், பாவத்தின் எச்சங்களும் , ஒழுக்ககேடான கூட்டாமையினால் உண்டான அடையாளங்களும் இயேசுவின் இரத்தத்தில் கழுவபடுவதாகும். இது சடங்கு பூர்வமான சுத்திகரிக்கப்படுதலுக்கான விடையாகும். இரத்ததினால் உண்டாகின்ற கழுவபடுதலினால் புதுமையான தோற்றம் உண்டாகின்றது. ஆதியிலே தேவன் உண்டாக்கிய சாயல் மீண்டும் பரிணமிக்கின்றது. இந்த சாயலே கிறிஸ்துவின் சாயலாகும்.

மன்னிக்கப்பட்டவர் கழுவபடுதலுக்கு ஒப்புக்கொடுக்கபடுவதினால் மாத்திரமே கிறிஸ்துவின் சாயல் பரிணமிக்கும்.

சுத்திகரிக்கும் தேவன்…..
கிறிஸ்துவின் இரத்தத்தால் நம்மை சுத்திகரிக்கிறார்…
தமது வார்த்தையினால் சுத்திகரிக்கின்றார்….
தமது ஆவியினால் சுத்திகரிப்பை உண்டுபண்ணுகிறார்….

சில கேல்விகள்….
மன்னிப்படைந்து சுத்திகரிக்கப்பட்டவர் திரும்பவும் அழுக்கடைய சாத்தியம் உண்டா?
மன்னிப்பு என்பது வார்த்தை சார்ந்ததா? அல்லது ஜீவன் சார்ந்ததா?
அநுதினமும் சுத்திகரிக்கப்படுதல் அவசியமானதா?

அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன். எரேமியா 33:8.

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். தீத்து 2:14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME