நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

And this is the victory that has overcome the world our. (1John 5:4)

1John 5:5; 1John 2:13-17; 1John 4:4; John 16:33; Romans 8:35-37; 1Corinthians 15:57; Revalation 2:7,11,17,26; Revalation 3:5,12,21; Revalation 12:11; Revalation 15:2.

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். (1 யோவான் 5:4)

1யோவான் 5:5; 1யோவான் 2:13-17; 1யோவான் 4:4; யோவான் 16:33; ரோமர் 8:35-37; 1கொரிந்தியர் 15:57; வெளி 2:7,11,17,26; வெளி 3:5,12,21; வெளி 12:11; வெளி 15:2.

இயேசுவை விசுவாசிப்பதே வெற்றி.

உழைப்பை நம்பி வெற்றி பெற்றவர்களும் உண்டு. கல்வியை நம்பி வெற்றி பெற்றவர்களும் உண்டு. பணம் செல்வம் ஆஸ்தி ஐசுவரியம் சம்பத்து ஆகியவற்றை நம்பி வெற்றி பெற்றவர்களும் உண்டு. சாத்தானை அந்நிய தெய்வங்களை நம்பி வெற்றி பெற்றவர்களும் உண்டு. ஆனால் இயேசுவை நம்பி விசுவாசித்து பின்பற்றி வெற்றி பெற்றவர்களோடு மேற்சொல்லப்பட்டவர்களும் போட்டியில் கலந்துக்கொள்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருத்தராய் பின்தங்கி முடிவில் போட்டியிலிருந்தே வெளியேறுகிறார்கள். வாழ்வின் ஓட்டத்தின் முடிவில் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து வெற்றிபெற்றவர்களே களத்தில் நிற்கிறார்கள் – நிலைத்து நிற்கிறார்கள். உலகத்தின் முடிவில் இதன் மகிமையை நாம் காணப்போகின்றோம். இக்காலத்தில் இயேசுவை விசுவாசிப்பவர்கள் தோல்வியடைவதை போல காணப்பட்டாலும் வெற்றி அவர்களுக்குரியதே. ஏனெனில் வெற்றி பெற்ற இயேசுவின் நாமத்திலே ஓடினார்கள். இயேசு யாவற்றையும் ஜெயித்து வெற்றிவீரராக உயர்ந்ததுபோல இவர்களும் உயர்வார்கள்.

நமது விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்பதின் பொருள் என்ன?. முதலாவது இயேசு கிறிஸ்துவை தவிர மற்ற எல்லாவற்றையும் தனது முதுகுக்கு பின்னாக வைப்பது. 2 ஆவது பூமியில் வந்து வாழ்ந்து நற்கிரியைகள் செய்து நல்லுபதேசங்கள் ஆற்றி மரித்து உயிர்த்து கிறிஸ்துவாக வெளிப்பட்டு வரப்போகிறவராக இருக்கிறார் என்று நம்பி அறிக்கையிடுவது. 3 ஆவது தான் பின்பற்றிய இயேசு கிறிஸ்துவை போல வாழும்படியாக தன்னை தயார்படுத்திக் கொள்ளுதல். 4 ஆவது இயேசு கிறிஸ்துவே என்றும் உயிரோடிருக்கிற தேவனின் சாயலாகவும் தேவ குமாரனாகவும் மகிமையின் ரூபமாகவும் இருக்கிறார் என்றும் இப்பொழுது பிதாவின் மடியில் வீற்றிருக்கிறார் என்றும் நம்புவது. 5ஆவது நான் பிழைப்பதும் வாழ்வதும் அவரால் மட்டுமே என்று தன்னில் உறுதிபடுத்திக் கொள்வதாகும். 6ஆவது நான் ஜெயிக்கின்ற அடைகின்ற சாதிக்கின்ற செயலாற்றுகின்ற யாவும் அவரைக் கொண்டு மட்டுமே. அவரைக்கொண்டு யாவையும் செய்கிறேன் என்பது. 7ஆவது என் ஜீவன் கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கிறது என்றும் ஆகையினால் மரணமோ, சாத்தானோ, உலகமோ, பாவமோ எதுவும் என் ஜீவனை பறித்துக்கொள்ள இயலாது என்றும் நம்புவதாகும்.

இந்த 7 விதமான விசுவாச வாழ்வு இந்த கொடிய காலத்தில் வாழும் நமக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. விசுவாசத்தை இழக்கிறவன் இயேசு கிறிஸ்துவை இழக்கிறான். பிதாவாகிய தேவனை இழக்கிறான். பரிசுத்த ஆவியை இழக்கிறான். வசனத்தின் உயிரை இழக்கிறான். இவைகளை இழந்து உலகத்தோடு ஒத்துபோய் உலகம் புகழ, நாடு புகழ, மனிதர் புகழ வாழ்கின்றனர். முடிவில் நம்பிக்கையில்லாத நரக வாழ்வில் சென்றடைகின்றனர்.

இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து அவருக்கு மட்டுமே கீழ்படிந்து வெற்றியின் பாதையில் பயணிக்க முயற்சி செய்யுங்கள்.

இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. யோவான் 20:31..

கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். இதுதான் அவர்கள் வழி; இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.

ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழந்தாலும், அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். சங்கீதம் 49:12-20

ADD YOUR COMMENT

Powered By Indic IME