நமக்குப் பாவமில்லையென்போமானால் சத்தியம் நமக்குள் இராது.
If we say that we have no sin,we deceive ourselves, and the truth is not in us. (1John 1 :8)
1John 2:4; 2John 1:1; 3John 1:3; 1John 3:18,19; 1 Timothy 6:3-5; Romans 1:20-32.
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. (1 யோவான் 1:8)
1யோவான் 2:4; 2 யோவான் 1:1; 3 யோவான் 1:3; 1யோவான் 3:18,19; 1 தீமோத்தேயு 6:3-5; ரோமர் 1:20-32.
சத்தியமில்லாதவன்.
தன்னில் பாவமில்லையென்று சொல்லுகிறவனின் இரண்டாவது குணம் அவன் சத்தியத்தைக் கொண்டிராதவனாயிருக்கின்றான் என்பதாகும். தன்னைதானே வஞ்சிக்கிறவனும் பிறரை வஞ்சிக்கிறவனுமாயிருக்கிறவன் தேவனுடைய சத்தியத்தை கொண்டிராதவனாயிருக்கிறான். தேவனுடைய சத்தியத்தை இழந்து போன சாத்தான் கீழே தள்ளப்பட்டான். இந்த சாத்தான் தேவனுடைய சத்தியத்தை தன்னுள் கொண்டிருந்த ஆதிபிதாக்களை சத்தியம் இல்லாத வஞ்சக வழிக்குள் வழி நடத்தினான். இதனால் ஆதி பெற்றோர் சத்தியத்தை இழந்து போயினர். சத்தியத்தை இழந்து போனவர்கள் தேவனுடைய காணியாட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
அசத்தியத்தினால் நிறைந்து சத்தியமில்லாதுபோன மனுகுலத்தை மீட்பதற்காக சத்தியத்தை பிரமாணமாகவும், அதன்பின்னர் அதை கிருபையாகவும், இயேசுவாகவும் வெளிப்படுத்தினார் தேவன். இந்த சத்தியத்தை ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் அவ்வப்போது உரைத்தார்கள். எப்பொழுதெல்லாம் இஸ்ராயேலர் சத்தியத்தை இழந்தார்களோ அப்பொழுதெல்லாம் இஸ்ராயேலர் இஸ்ராயேல் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டு சிறைகளாயினர்.
சத்தியமாகிய இயேசு கிறிஸ்துவை கொண்டுள்ள சபையே சத்திய சபையாகும். இயேசுவாகிய சத்தியத்தை இழந்து அசத்தியமானதற்கும், வஞ்சகத்திற்கும், பொய்ம்மைக்கும், பாவத்துக்கும், சண்டிதனத்துக்கும், பொருளாசைக்கும் இடம் கொடுக்கிறவர்கள் சபையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அசுத்தத்திற்கும், சாத்தானின் உபாதைக்கும் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மனந்திரும்பி, மன்னிப்பை பெற்று, சத்தியத்தை பிடித்துக்கொண்டு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.
தன்னில் பாவமில்லை என்று சொல்லுகிற சன்மார்க்கனில் சத்தியம் இல்லை. ஏனெனில் பாவத்தை நீக்கி, இரட்சிப்பதற்காகவே சத்தியமாகிய இயேசு வந்தார். எல்லாரும் பாவம் செய்து கெட்டுப்போயிருக்க, பாவமில்லை என்று சொல்லிக்கொள்கிற புறத்தியான் இரட்சிப்புக்கு இடம் கொடாததினால் சத்தியமாகிய இயேசுவை கொண்டிராதவனாகின்றான்.
சத்தியமில்லாதவன்……
மூர்க்கனும், கொடூரகுணமும், மற்றும் இரக்கமற்றவனுமாயிருப்பான்.
பொய்களின் புகலிடமாக இருப்பான்.
பாவ உணர்வில்லாதவனாக – குற்ற உணர்வில்லாதவனாக இருப்பான்.
வெளிச்சத்தில் வெளியரங்கமாக வாழ்வதை விரும்பான்.
பாவியாயிருந்து மிகுந்த நன்மையை கெடுப்பான்.
சில கேள்விகள்….
சபையிலே சண்டைபண்ணி கலகம் விளைவித்து பிரிந்துப்போகின்றவர்கள் ஆவியில்லாதவர்களும், சத்தியமில்லாதவர்களும் என்று கூறலாமா?
சத்தியமில்லாத சன்மார்க்கனின் நயமான பேச்சை நம்பலாமா?
சத்தியமில்லாமையும் பொருளாசையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா?
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. யாக்கோபு 3:13-18.