தோமா: நான் விசுவாசிக்கமாட்டேன்.
Unless I see in His hands…. I will not believe. (John 20:25)
John 20:20; John 6:30; Matthew 16:1-4; Matthew 27:42; Luke 24:25,36-44; Hebrews 3:12,18,19; Hebrews 4:1,2; Hebrews 10:38,39; Job 9:16; Psalms 78:11-22,32; Psalms 95:8-10; Psalms 106:21-24.
மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். (யோவான் 20:25)
யோவான் 20:20; யோவான் 6:30;மத்தேயு 16:1-4;27:42; லூக்கா 24:25,36-44; எபிரெயர் 3:12,18,19; எபிரெயர் 4:1,2; எபிரெயர் 10:38,39; யோபு 9:16; சங்கீதம் 78:11-22,32; சங்கீதம் 95:8-10; சங்கீதம் 106:21-24.
நான் விசுவாசிக்க மாட்டேன்.
இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது காணப்படாத தோமாவினால் இயேசுவை இன்னார் என்றும், அவர் என்ன செய்தார் என்றும், இனி அவரின் ஸ்திதி என்ன என்றும் அறிய இயலாமல் போயிற்று.
இயேசுவோடு கூட வாழ்ந்து, கண்டு, கற்று, அனுபவித்த பொழுதிலும் அவரை நம்பவோ, விசுவாசிக்கவோ இயலாமல் போயிற்று. இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருப்போரின் நிலை என்னவாகும் என்பதையும் இதன்மூலம் அறிகின்றோம்.
விசுவாசம் கண்டு அறிவதினாலும், கேட்டு அறிவதினாலும், தொட்டு அறிவதினாலும் உருவாகிறது. கண்டு அறிந்த தோமா, கேட்டு அறிந்த தோமா, இப்பொழுது தொட்டு அறிய முயற்சிக்கின்றார். இப்படி செய்யலாமா என்றால் கூடாதுதான் என்பதை பின்னர் காண்கின்றோம். அவரை தொட்டு அனுபவித்து அறியவேண்டும் என்ற ஆர்வம் கொள்வதில் தவறில்லை. ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலையே சந்தேகித்ததுதான் ஆபத்தான ஒன்றாக மாறியது. நாமும் இந்த மூன்று அறிவுகளில் ஏதாவதொன்றிலே நம் ஆவிக்குரிய வாழ்வை கட்டி எழுப்புவோமாக.
தோமாவின் அவிசுவாசத்தின் விஸ்தீரணமானது, காயத்தை நான் பார்க்க வேண்டும், காயத்திலே என் விரலையிட வேண்டும். என் கையை அவருடைய விலாவிலே போட வேண்டும் என்பதாக இருக்கிறது. இந்த மூன்றையும் நான் செய்து பார்த்தால்தான் அவரை நம்புவேன் என்று அழுத்தமாக கூறினார். அவிசுவாசம் தோமாவை 5 நிலைகளுக்கு கொண்டு போனது.
முதலாவது, அவரது தோற்றத்தை சந்தேகிக்க வைத்தது. அவர் மகிமையின் ரூபமானவர், மனித சொரூபமானவர் என்றெல்லாம் அறிந்திருந்த தோமா இப்பொழுது அவரது சாயலை சந்தேகிக்கின்றார். இந்த சந்தேகமே பிற்கால சபைகளில் பல தப்பறைகளுக்கும் காரணமாயிருந்தது.
இரண்டாவது, அவரது தன்மையை சந்தேகிக்கின்றார். மனித தன்மையுடையவராக இருக்கின்றாரா அல்லது வெறும் ஆவி தன்மையுடையவராக இருக்கின்றாரா என்று சந்தேகிக்கின்றார். அவர் வரும்போது அவரை காணாத தோமா என்னவெல்லாம் சந்தேகிக்கின்றார்? அய்யய்யோ.. என்னா அவலம்!.
மூன்றாவது, இவர் இயேசுவாக இருக்க முடியாது. அவரை போலொத்த மனிதனோ. அல்லது தேவதூதனாகவோ இருக்கலாம். ஏனெனில் அவரை போல அனேகம் பேர் காணப்பட்டனர். அவரோடு தேவதூதர்களும் காணப்பட்டனர்.
நான்காவது, இயேசு கிறிஸ்து பிரசங்கித்த உயிர்த்தெழுதலை நம்பவில்லை. சதுசேயர்களைபோல மூன்றாவது நாள் உயிர்த்தெழுவார் என்பதை ஏற்கவில்லை. அதாவது இயேசுவோடு கூட இருந்த மூன்றரை வருடங்களிலும் அவரின் உயிர்த்தெழுதல் குறித்த செய்தியை விசுவாசிக்காமலேயே இருந்துள்ளார்.
ஐந்தாவது, தன்னோடு கூட உள்ள சீஷர்கள் யாவரும் பயத்தினிமித்தம் அலறுகின்றார்கள், கூச்சலிடுகின்றார்கள் என்று நம்புகிறார். தான் மட்டுமே தெளிவான சிந்தனையுள்ளவன் என்று தனக்குள் பெருமை பட்டுக் கொண்டவராய் காணப்படுகின்றார்.
அவிசுவாசம், நம்பிக்கையின்மை, பற்றின்மை, பக்தியின்மை, கீழ்படியாமை ஆகிய யாவும் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்களோடு கூட்டாண்மை கொண்டால் நமக்கும் ஆபத்துதான்.
அவிசுவாசம் மூழ்கும் கப்பல். அவிசுவாசம் திருப்தியின்மையில் கொண்டுபோய் சேர்க்கும்.
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரேயர் 11:1-6.
அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள். கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான். இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள். சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள். தீத்து 1:10-16.