இயேசு வந்தபோது தோமா சீஷர்களோடு இருக்கவில்லை.
Thomas, called the Twin, one of the twelve, was not with them when Jesus came. (John 20:24)
John 11:16; John 14:5; John 21:2; John 6:66,67; John 20:26; Matthew 10:3; Matthew 18:20; Hebrews 10:25; Number 11:26,27.
இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.(யோவான் 20:24)
யோவான் 11:16; யோவான் 14:5; யோவான் 21:2; யோவான் 6:66,67; யோவான் 20:26; மத்தேயு 10:3; மத்தேயு 18:20; எபிரெயர் 10:25; எண்ணாகமம் 11:26,27.
தோமா கூட இருக்கவில்லை.
இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவராயிருந்த தோமா என்கிற திதிமு இயேசு கிறிஸ்து வரும்போது சீஷர்களோடு காணப்படவில்லை. இந்த செயல்தான் பின்வரக்கூடிய நிகழ்வுகளுக்கு மையமாக அமைந்தது.
தோமா என்றால் இரட்டையர் என்று பொருள். திதிமு என்பது குடும்ப பெயராக இருக்கக்கூடும். இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் பயத்துடனும், நடுக்கத்துடனும் அறைவீட்டில் அடைப்பட்டுக் கிடக்கும்போது தோமா எங்கே போனார் என்பது குறித்து பல்வேறு சிந்தனைகள் எழும்பியுள்ளன. ஒருசிலவற்றை மட்டும் நாம் இன்றைய தியானத்துக்கு எடுத்துக் கொள்ளுவோம்.
முதலாவது, பயத்தினிமித்தம் மறைந்து வாழ முயற்சித்திருக்கலாம். அரசாங்கத்தினால் உண்டாகும் நெருக்குதல்களுக்கு அஞ்சி எங்கோ தனிமையில் நேரத்தை செலவழித்திருக்கக்கூடும்.
இரண்டாவது, ஏதாவது அலுவல்களினிமித்தம் சென்றிருக்கக்கூடும். மூத்த சீஷர்களால் கொடுக்கப்பட்ட அலுவலோ, அல்லது தன்னுடைய சொந்த அலுவலினிமித்தமாகவோ, குடும்ப விஷயங்களினிமித்தமாகவோ சென்றிருக்க்கூடும்.
மூன்றாவது, இவ்விதமான சபை கூடிவருதலை அவசியமானதாக கருதவில்லை. இயேசு கிறிஸ்துவின் மரணம் தோமாவை அவிசுவாச நிலைக்கு தள்ளிவிட்டது. உற்சாகமிழந்தவனாக, மூத்த சீஷர்கள் மேல் வெறுப்புடையவனாக, வேண்டும் வேண்டாத நிலையுள்ளவனாக இருந்திருக்க்கூடும். அசதியுடையவனாக காணப்பட்டிருக்கூடும்.
நான்காவதாக, இயேசு கிறிஸ்து சீஷர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியை வாக்களித்தபோது இந்த தோமா அங்கிருந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையினால்தான் நான் அவருடைய விலாவில் கைபோட்டலொழிய நம்பமாட்டேன் என்று கூறியிருக்கூடும். பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள இயலாத தோமாவினால் இயேசுவை நம்பவும் இயலாமல் போயிற்று. 1யோவான் 4:2,3. தேவனுடைய ஆவியினாலேயன்றி ஒருவரும் இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைக்க இயலாது. தோமாவுக்கும் இந்த நிலையே ஏற்பட்டிருக்கூடும்.
தேவனுடைய மக்களில் பலர் தேவனுடைய சபைகளில் நடக்கும் காரியங்களில் கலந்துக்கொள்ள ஆர்வமற்று சொந்த பணிகளில் ஈடுபட்டு அபிப்பிராய பேதங்களினால் நிறைந்து, கர்த்தராகிய இயேசுவின்மேல் மெய்யான பக்தியில்லாதவர்களாக சபைகூடிவருதலை விட்டு விடுகிறார்கள். கர்த்தருடைய சமூகத்தில் சகவிசுவாசிகளோடு சேர்ந்து ஆண்டவருடன் நல்ல ஐக்கியத்தை வளர்த்துக் கொள்ளாதிருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களுக்குள் தேவனுடைய ஆவியில்லாமல் மாம்சத்தின் ஆவியை கொண்டிருப்பதுவேயாகும்.
எந்த விசுவாசியும் கர்த்தருடைய ஆவியை கொண்டிராமல் கர்த்தருடைய காரியங்களில் ஆர்வம் கொள்ள இயலாது. மீளமுடியாத பணிகளினாலும், குடும்ப பிரச்சனைகளினாலும், தேவைகள் அதிகமிருப்பதினாலும் கர்த்தருடைய காரியங்களில் நாட்டமிழந்து , ஆர்வமிழந்து முடிவில் தோமாவைபோல அவிசுவாசத்தை வெளிபடுத்தும் மக்களாக மாறாதபடிக்கு ஆண்டவரின் காரியங்களுக்கென்று நேரத்தை ஒதுக்கிக்கொடுத்து அலுவல்களை செய்வதினால் மட்டுமே வருங்கோபத்துக்கு தப்பிக்க முடியும்.
சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பாரென்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே. எபிரேயர் 10:19-31.