தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று சொல்லுகிற காலம் வரும்

உங்களைக் கொல்லுகிறவன் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று சொல்லுகிற காலம் வரும்.

Time is coming that whoever kills you will think that he offers God service. (John 16:2)

Matthew 10:28; Matthew 24:9; Act 5:33; Act 6:13,14; Act 7:56-60; Act 8:1-3; Act 9:1,2; Act 22:3,4; Act 26:9-11; Romans 10:2,3; Galathians 1:13,14; Philippians 3:6.

அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங்காலம் வரும்.  (யோவான் 16:2)

மத்தேயு 10:28; மத்தேயு 24:9; அப்போஸ்தலர் 5:33; அப்போஸ்தலர் 6:13,14; அப்போஸ்தலர் 7:56-60; அப்போஸ்தலர் 8:1-3; அப்போஸ்தலர் 9:1,2; அப்போஸ்தலர் 22:3,4; அப்போஸ்தலர் 26:9-11; ரோமர் 10:2,3; கலாத்தியர் 1:13,14; பிலிப்பியர் 3:6.

தொண்டு செய்கிறவன்:

இயேசுகிறிஸ்து ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்யும்படியாக வந்தார். அதைபோலவே சீஷர்களின் கால்களை கழுவவும், தீட்டாக கருதப்பட்ட குஷ்டரோகிகளைத் தொடவும், பாவத்தில் செத்து போனவர்களை மீட்க தன்னை பலியாக்கவும் சேவையாற்றினார். அவரது சேவைகள் நற்கிரியைகளாக காணப்படுகின்றது.

இயேசுகிறிஸ்துவை இன்னார் என்று அறியாமல் மத வைராக்கியம் கொண்ட யூதர்கள் அவரை சிலுவைக்கு ஒப்புகொடுத்து தங்களை தேவனுக்கு பணி செய்கிறவர்களாக காட்டி கொண்டார்கள். அவரை குற்றவாளியாக்கி , தூஷணக்காரன் என்று சொல்லி யூத சமயத்துக்கு புறம்பாக்குவதினால் தேவன் தங்களை விரும்புவார் என்று கருதினார்கள். தங்களை தேவனோடிருக்கிறவர்கள் என்று காண்பிக்க தேவ குமாரனையே கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அதை போலவே இயேசுவை பின்பற்றுகிறவர்களையும் கொலை செய்துவிட்டு தங்களை தேவனருகில் நின்று பணி செய்கிறவர்கள் என்று தங்களை தாங்களே மெச்சிக் கொள்கின்றனர்.

நியாயப்பிரமாணம் போதிக்கிறவைகளை அறியாமல் பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்டு யூதர்கள் செயல்பட்டனர். இயேசுவை துன்புறுத்திய யூதர்கள் இயேசுவை குழப்பவாதி, திரிபுகாரன் என்று வெறுத்து அவரை சார்ந்தவர்களையும் அழிக்க முனைந்தனர். கைகளில் இரத்த கறைகளோடு தேவனிடம் நெருங்கினர். துணிகரத்தோடு தேவனை நெருங்கினர். தங்களுக்கு தாங்களே தீர்ப்பிட்டு கொண்டு தேவனிடம் வந்தனர்.

இன்றைக்கும் தங்களை உண்மை மதவாதி என்று கூறி கொண்டு சக மனிதர்களை கொன்று குவித்து , கிறிஸ்தவ சபைகளை அழித்துவிட்டு தங்களுக்கு தாங்களே நியாயம் பாராட்டி நிற்கின்றனர். நியாதிபதி தங்கள் வாசலருகே நிற்கிறார் என்பதை மறந்து விட்டனர். தவறு செய்த சாத்தானே நியாயதீர்ப்புக்காய் காத்திருக்கும்போது அவனுக்கு ஆதரவாய் செயல்படும் மதவாதிகள் வேறு எங்குதான் நிறுத்தப்படுவர்.

நமக்கு கிடைத்த இந்த சமயத்தில் நம்மில் உள்ள குறைகளை நிவிர்த்தி செய்து அவரிடம் திரும்புவோமாக.

தனக்கு தானே தீர்ப்பு எழுதுகிறவனும், தன்னில்தானே திருப்திப்பட்டு கொள்கிறவனும் நியாயாதிபதி முன் நிற்பர்.

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். மத்தேயு 7:1-6.

ADD YOUR COMMENT

Powered By Indic IME