ஒருவன் ஜலம், ஆவியினால் பிறவாது தேவ ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க இயலாது

ஒருவன் ஜலம், ஆவியினால் பிறவாது தேவ ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க இயலாது

unless one is born of water and the Spirit, he cannot enter the kingdom of God.(John 3:5)
Mt3:11;Mk16:16;Act2:38;1Co2:12;6:11;Eph5:26;Tit3:4-7;1Pt1:2;3:21;1Jn2:29;5:1,6-8;Isa44:3,4;Eze36:25-27.

இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
(யோவான் 3:5)

மத்தேயு 3:11; மாற்கு 16:16; அப்போஸ்தலர் 2:38; 1கொரிந்தியர் 2:12; 1 கொரிந்தியர் 6:11; எபேசியர் 5:26; தீர்த்து 3:4-7; 1 பேதுரு 1:2; 1 பேதுரு 3:21; 1 யோவான் 2:29; 1 யோவான் 5:1,6-8; ஏசாயா 44:3,4; எசேக்கியேல் 36:25-27.

பிறத்தலும் பிரவேசித்தலும்
பூமியில் பிரவேசிக்க தகப்பன் – தாயால் பிறப்பிக்கபடவேண்டும். இந்த பூமியில் வாழ இது போதுமானது.

பரலோகில் பிரவேசிக்க ஜலம், ஆவியால் பிறப்பிக்கப்பட வேண்டும். இது அவசியமானது. பூமி வாழ்விலிருந்து அடுத்த வாழ்வுக்குபோக இது அவசியம்.

ஜலம், ஆவி என்பது நேர்மறையாக விளக்கினால் தண்ணீர்ஞானஸ்நானத்தயும், ஆவி ஞானஸ்நானத்தையும் குறிக்கின்றது.

– தண்ணீர் முழுக்கினால் சபைக்குட்படுகிறோம். கிறிஸ்துவின் சரீரத்துக்குள் வருகிறோம்.
– ஆவியின் முழுக்கினால் தேவ இராஜ்ஜியத்துக்குட்படுகிறோம், தேவ ஆளுகைக்குள் வருகிறோம்.

தண்ணீர் முழுக்கில்லாமல் – சபைக்குட்படாமல் பரலோகில் பிரவேசிக்க இயலாது.
ஆவி முழுக்கில்லாமல் – ராஜ்ஜியத்துக்குட்படாமல் பரலோகத்தில் பிரவசிக்க இயலாது. எனவே தான், ஜலம், ஆவி அவசியம் என்று கூறுகின்றார்.

ஜலத்துக்குட்படுதல் கீழ்படிதலை காட்டும்.
வசனத்துக்கு கீழ்படிகிறான். இயேசுவை விசுவாசிக்கிறான். இயேசுவை ஏற்றுக்கொள்கிறான்.

ஆவிக்குட்படுதல் ஆளுகைக்குள் வருதல் அதாவது அர்ப்பணத்தை காட்டும். வசனத்தில் வளருகிறான். விசுவாசத்தில் வளருகிறான். இயேசுவை போலாகிறான்.
தேவனை தொழுது கொள்கிறான்.

ஜலத்துக்கும் – ஆவியானவருக்கும் தொடர்புண்டு.
உலக படைப்பில் – ஆதியாகமம் 1
மனுக்குல மீட்பில் – அப்போஸ்தலர் 2
புது உலக குடியேறுதலில் – யோவான் 3

தண்ணீர் முழுக்கு வெளிப்படையான அறிக்கை. ஆவி முழுக்கு உள்ளான அறிக்கை.

கர்த்தாவே, நாங்கள் உம் வசனத்தை கேட்டு, விசுவாசித்து, இயேசுவை ஏர்றுக்கொண்டு உமது ஆவியானவரை பெற்று பரலோக தேவனாகிய உம்மை தொழுதுகொள்ள உதவி செய்தீரே. உமக்கு நன்றி. தொடர்ந்து உம் மகனாகிய கிறிஸ்துவின் சரீரத்துக்குள் வாழ்ந்து உமது ஆவியானவரை கொண்டு உம்மை தொழுது கொள்ள உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME