தேவாலயத்திலே விற்கிறவர்கள், காசுகாரர் இவர்களை துரத்தி எடுத்துகொண்டு போங்கள் என்றார்.
புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். (யோவான் 2:16)
மத்தேயு 21:12; மாற்கு 11:15; லூக்கா 19:45; உபாகமம் 14:22-26; லேவியராகமம் 19:30; சகரியா 4:6; சகரியா 14:21; 2கொரிந்தியர் 10:4; அப்போஸ்தலர் 19:24-27; 1தீமோத்தேயு 6:3-5; 2பேதுரு 2:3,13,14.
தேவாலயம் பரிசுத்தமான இடம்.
இந்த நாளின் தியானத்தில் தேவாலயம் எப்படிபட்ட இடமல்ல என்பதை குறித்து தியானிக்கலாம்.
– தேவாலயம் வியாபார ஸ்தலமல்ல.
– தேவாலயம் காணிக்கைகளை வசூல் பண்ணுகிற இடமல்ல.
– தேவாலயம் தலைவர்கள், இராஜாக்களை நியமிக்கிற இடமல்ல.
– தேவாலயம் மதசார்பற்றவைகளை பயன்படுத்துகிற இடமல்ல.
– தேவாலயம் நம் விருப்பங்களை நிறைவேற்றுகிற இடமல்ல.
– தேவாலயம் ஓட்டு போடும் இடமல்ல.
– தேவாலயம் நமது அடையாளங்களை மிகை படுத்தும் இடமல்ல.
– தேவாலயம் சண்டை பண்ணுகிற இடமல்ல.
– தேவாலயம் எதிர்த்து கேள்வி கேட்கிற இடமல்ல.
– தேவாலயம் நமது அழகு, ஐசுவரியம், அந்தஸ்து, கவுரவம் வெளிபடுத்தும் இடமல்ல.
– தேவாலயம் பாவிகளின் கூடாரமல்ல – மறைவிடமல்ல.
– தேவாலயம் இச்சைகளை நிறைவேற்றுகிற இடமல்ல.
– தேவாலயம் சந்தடிமிக்க இடமல்ல.
– தேவாலயம் உலகியல் காரியங்களை பேசுவதும், ஆலோசிப்பதுமான இடமல்ல.
– தேவாலயம் அரசியல், சமூக காரியங்களை பேசுகிறதும், ஆலோசிக்கிறதுமான இடமல்ல.
– தேவாலயம் பிற தெய்வங்களை
– சமயங்களை பற்றி பேசுகிற இடமல்ல.
– தேவாலயம் உரையாடல் நடத்துகிற இடமல்ல.
– தேவனை தங்களிஷ்டம் போல வளைக்கிற இடமல்ல.
இதை போலொத்த 5 காரியங்களை நீங்கள் பட்டியலிடுங்கள்.
தேவாலயம் என்பது என்னவென்று வரும் நாட்களில் நாம் தியானிக்கலாம்.
கர்த்தாவே உம் பிரகாரத்தை நாங்கள் உம்மாலேயே பெற்றுள்ளோம். நாங்கள் எங்களையே உம் பிரகாரத்தில் மிகை படுத்துகிறோம். இனி நாங்கள் அப்படியிராதபடியிருக்கு உமது கிருபையால் எங்களை கடாட்சித்தருளும்.