அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்.
because God the Father has set His seal on Him. (John 6:27c)
Jn1:33,34; Jn5:36,37; Jn8:18; Jn10:37,38; Jn11:42; Jn15:24; Mt3:17;Mt17:5; Lk4:18-21; Act2:22; Act10:38; 2Cor1:21,22; 2Pet1:17; Ps2:7; Ps40:7; Isa11:1-3; Isa42:1; Isa61:1-3.
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்: அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்: அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். (யோவான் 6:27)
யோவான் 1:33,34; யோவான் 5:36,37; யோவான் 8:18; யோவான் 10:37,38; யோவான் 11:42; யோவான் 15;24; மத்தேயு 3:17; மத்தேயு 17:5; லூக்கா 4:18-21; அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 10:38; 2கொரிந்தியர் 1:21,22; 2 பேதுரு 1:17; சங்கீதம் 2:7; சங்கீதம் 40:7; ஏசாயா 11:1-3; ஏசாயா 42:1; ஏசாயா 61:1-3.
பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்:
இயேசுகிறிஸ்து பிதாவினால் முத்திரையிடப்பட்டுள்ளார்.
எதற்காய் முத்திரையிடப்பட்டார்?எதைக்கொண்டு முத்திரையியடப்பட்டார்?
என்று நாம் கேள்வி எழுப்புகிறோம். இப்பகுதியில் இயேசுகிறிஸ்து பாவத்தில் மரித்த மனிதனுக்கு நித்திய ஜீவனைகொடுக்கும்படியாக தேவனுடைய ஆவியினால் – பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டார். முத்திரையிடப்பட்ட இயேசுகிறிஸ்து அதற்கேற்றாற்போல நடந்துகொண்டார். ஆகையினால்தான் அவர் நமக்கு மாதிரியை வைத்துப்போனார் என்று விவிலியம் கூறுகின்றது.
பிதாவினால் முத்திரையிடப்பட்ட இயேசுகிறிஸ்து கெத்சமனேயிலும் தேற்றப்பட்டார்.
பாடுகளிலும் தந்தைமுகம் நினைவு கூர்ந்தார்.
மரணத்திலும் உயிர்ப்பிக்கப்பட்டார். பிதாவின் வலதுபாரிசம் வரையிலும் உயர்த்தவும் செய்யப்பட்டார்.
தேவனுடய நோக்கத்தைவிட்டு இயேசு மாறவில்லை.
மனிதர்க்கு ஜீவன் கொடுக்க தன் ஜீவனையும் தந்தார்.
தற்காலத்தில் இயேசுவை அறியாதோருக்கு புத்துயிர் கொடுக்கும் திருப்பணிக்காய் முத்திரிக்கப்பட்ட தேவமனிதர்கள் ஐசுவரியத்தின் மயக்கத்திலும், சிற்றின்ப சுகபோகத்திலும், பதவி பித்தாசையிலும், உலகியல் சிந்தனையிலும், மாம்சீக இச்சைகளிலும் சிக்கி முத்திரிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து கொடிகட்டி பறக்கின்றனர்.
என்னை தேவன் முத்திரித்திருக்கிறார், அபிஷேகித்திருக்கிறார், நியமித்திருக்கிறார், ஏற்படுத்தியிருக்கிறார் என்று நீ கூறுவாயானால் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள். உன்னைகொண்டு தேவன் செய்யும் நோக்கத்தை மறவாதே.
விட்டு விலகவும் செய்யாதே.
முத்திரை பத்திரமாயிருக்கட்டும். முத்திரை இழந்தால் முகத்திரை ஒருநாள் கிழிந்துபோகும்.
கர்த்தாவே உம் ஆவியினால் உம் மகனை முத்திரையிட்டு மனுக்குல மீட்புக்காய் ஏற்படுத்தினீர். அவரது இரத்தத்தால் மீட்கபட்ட நாங்களும் ஆவியினால் முத்திரையிடப்பட்டு பலரின் மீட்புக்காய் செயல்பட கிருபைதாரும், பெலன் தாரும்.