தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம்.
And we have known and believed the love that God has for us. (1John 4:16)
1John 4:9,10; 1John 3:1,16; 1Corinthians 2:9; Romans 8:28; Psalms 18:1-3; Psalms 31:19; Psalms 36:7-9; Isaiah 64:14.
தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். (1 யோவான் 4:16)
1யோவான் 4:9,10; 1யோவான் 3:1,16; 1கொரிந்தியர் 2:9; ரோமர் 8:28; சங்கீதம் 18:1-3; சங்கீதம் 31:19; சங்கீதம் 36:7-9; ஏசாயா 64:4.
தேவனின் அன்பை அறியும் இருதயம்.
மனுகுலத்தின் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில் தண்டிக்கிற தகப்பனின் அன்பையும், கண்டிக்கிற, தண்டிக்கிற ஆசிரியரின் மற்றும் போதகரின் அன்பையும் புரிந்துகொள்ளாததுவேயாகும். இதேபோன்று அன்றாடக நிகழ்வுகளில் நடக்கின்றதை நாம் புரிந்துக் கொள்ளாததுவே கண்டிக்கிற – தண்டிக்கிற – கடிந்துக்கொள்கிற – ஆக்கினை தீர்ப்பளிக்கிற தேவனின் அன்பை புரிந்துக்கொள்ள இயலாததாயிற்று. ஜீவனைக் கொடுத்த இயேசுவின் அன்பை அங்கீகரிக்கின்றோம். ஆனால் சாட்டையை சுழற்றின – ஐயோ என்று கண்டித்த இயேசுவின் அன்பை ஏற்றுக்கொள்வதில்லை. இதற்குரிய அடிப்படை காரணம் என்னவெனில் கொடுக்கிற – அணைக்கிற – சிரிக்கிற – கண்டுக்காமலிருக்கிறவர்களிடத்தில் மட்டும்தான் அன்பு உள்ளது, கண்டிக்கிற – தண்டிக்கிறவர்களிடத்தில் அன்பு இல்லை என்ற சித்தாந்தமேயாகும்.
பாவம் செய்த மனுகுலத்தை தண்டனைக்கும் – ஆக்கினை தீர்ப்புக்கும் ஒப்புக்கொடுத்து உலகையே அழிவுக்கு உட்படுத்திய தேவனை நாம் அறிந்திருக்கிறோம். எதிர்த்துப் பேசின கோராகின் வம்சத்தை அழித்துப்போட்ட தேவனின் குணாதிசயத்தை அறிந்திருக்கிறோம். கொடுப்பதில் மாய்மாலம் காண்பித்த அனனியா சப்பீராளை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்ததை அறிந்திருக்கிறோம். இன்னும் நிறைய அறிவோம். தண்டித்த – கண்டித்த அதே தேவன் தான் ஆதாமுக்கு தோலுடை கொடுத்தார். காயீனை தப்புவிக்க அடையாளம் போட்டார். தள்ளப்பட்ட பாவிகளின் மீட்புக்காக தன் ஒரே பேறான மகனையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும். தேவனின் அன்பும் கண்டிப்பும் இணைந்தே உள்ளது என்பதை அறிந்திடுக.
இரட்சிக்கப்பட்ட ஜனத்தின் பாவங்கள் யாவையும் மன்னித்து நீக்கிப்போடக் காரணம் அவைகளை இனி நினைவுகூரப்படுவதற்கோ பின்பற்றப்படுவதற்கோ அல்ல என்பதுவே. அன்று செய்த அதே பாவத்தை திரும்பவும் செய்யும்போது அநேக அடிகளுக்கு பாத்திரவான்களாகின்றோம் என்பதை அறிய வேண்டும். அன்று அடிக்காமல் மன்னித்தார். இன்றோ அடித்து காயபடுத்தி மனந்திரும்பவைத்து காயங்ககட்டி அன்புகாட்டி குணமாக்குகிறார்.
இரட்சிக்கப்பட்ட ஒருவர் எத்தகைய தவறுகளையும் செய்யாதிருக்க தேவனின் பாதுகாப்பு வளையம் உண்டு. ஆனால் அதையும் மீறி பாவம் செய்யும்போது எத்தகைய தவறானாலும் அதற்கு எதிர்விளைவுகள் உண்டு. பெற்றோரை கனம்பண்ணாதது, பெரியோரை மதியாதது, கணவரை கனவீனம் பண்ணுவது போன்றவைகளும் தவறுகளே. இதற்கும் எதிர்விளைவுகள் உண்டு.
இரட்சிக்கப்பட்ட ஒருவர் செய்கிற தவறுகளுக்கு இவ்வுலகில் தண்டனைகளை அனுபவித்திராவிட்டால் இரு விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒன்று அவர்கள் அவர்களின் பாவங்களிலே நெடுகபோகும்படியாக விட்டுவிடப்படுவார்கள். இன்னொன்று அவர்கள் இறுதி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அன்பு என்பதின் மறுபுறம் நமக்காய் தண்டனையேற்ற இயேசுவின் வலியும் வேதனையும் காணப்படுகிறது என்பதாகும். இதை உணர்ந்து நல்வழியில் செம்மையாக நடந்து அவரின் அன்புக்குரியவர்களாய் வாழ்வோம். இல்லையெனில் அவர் அடையும் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் ஈடாக அவரது கோபம் பற்றியெரியும் என்பதை மறக்க வேண்டாம்.
அன்பும் கண்டிப்பும் இணைந்ததுவே கிறிஸ்தவ வாழ்வு.
கேள்வி. இக்கால கொள்ளைநோயையும் அதனால் இழப்புக்குள்ளாகிற தேவ மனிதர்களையும் குறித்து என்ன நினைக்கின்றீர்?
தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான் அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்
பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன். லூக்கா 12:47-49..
கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன். எரேமியா 10:24..
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன். எரேமியா 30:11..