தேவன் ஒளியாயிருக்கிறார்.
God is light. (1John 1:5)
Psalms 27:1; Psalms 36:9; Psalms 84:11; Isaiah 60:19; John 1:4,9; John 8:12; John 9:5; John 12:35,36; 1 Timothy 6:16; Revelation 21:23; Revelation 22:5.
தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. (1 யோவான் 1:5)
சங்கீதம் 27:1; சங்கீதம் 36:9; சங்கீதம் 84:11; ஏசாயா 60:19; யோவான் 1:4,9; யோவான் 8:12; யோவான் 9:5; யோவான் 12:35,36; 1 தீமோத்தேயு 6:16; வெளி21:23; வெளி 22:5.
ஒளியின் தேவன்.
யோவானின் கற்பனைத் திறனின் வெளிப்பாடு அல்ல. இது யோவானின் உண்மை காட்சி. இங்கு இயேசு கிறிஸ்துவை அல்ல இயேசு கிறிஸ்துவின் தந்தையின் தேவனைக் குறித்து குறிப்பிடுகின்றார். பொதுவாகவே யோவானின் நூல்களில் பிதாவிலும் குமாரனிலும் வைத்திருக்கின்ற இணையான விசுவாசமே உண்மை விசுவாசம் என்ற கூற்று கூறப்பட்டிருக்கும். ஆகவே இங்கே பிதாவானவரை ஒளியாக குறிப்பிடுகின்றார். யோவான் சுவிசேஷத்திலோ இயேசுவை ஒளியாக குறிப்பிட்டிருந்தார்.
ஒளியை நன்மையாகவும், ஜீவனாகவும், உற்பத்தி சக்தியாகவும், மூல காரணமாகவும் குறிப்பிட்டு சகலவற்றிற்கும் மூல காரணமாய் இருக்கின்ற பிதாவானவரே வெளிச்சமாக அறியப்படுகின்றார்.
தேவனிடமிருந்து வந்த கிறிஸ்துவும் ஒளியாகவே காணப்பட்டார். அவரிடமிருந்து வருகிற யாவும் ஒளியின் காரியங்களாகவே காணப்படுகின்றது. ஒளியை உண்டாக்கினவர் அவரே. ஒளியை அனல் கக்கும் ஒளியாகவும், குளிர் ஒளியாகவும், மின்னும் ஒளியாகவும் வடிவமைத்தவர் அவரே. ஒளியாய் இருப்பவரால் மட்டுமே ஒளியைக் கொடுக்கும் எந்த ஒன்றையும் உருவாக்க முடியும்.
ஒளியாய் இருக்கிற தேவன் தம்மால் உண்டாக்கப்பட்ட மனு குலத்தையும் ஒளியின் பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றார். அவர்கள் நட்சத்திரங்களாகவும், சூரியன்களாகவும், சந்திரன்களாகவும் பிரகாசிப்பார்கள்.
தேவனின் முகத்தின் ஒளி தங்கள் மேல் பிரகாசிக்க வேண்டும் என்று தாவீது கூறுகின்றார்.சங்கீதம் 4:6. ஒளியை வஸ்திரமாக தரித்திருக்கிறார் என்று சங்கீதம்104:2 கூறுகின்றது. அவர் இஸ்ராயேலின் ஒளியானவர் என்று ஏசாயா கண்டு அறிந்து அனுபவித்து 10:17 ல் எழுதி வைத்துள்ளார்.
ஒளியாக ஜொலிக்கிற அவர்கள் பிரகாசம் அடைகிறது மாமல்ல பிரபல்யமும் அடைகிறார்கள்.ஏசாயா 60:3; தானியேல் 12:3. தேவனுடைய மகிமை பிரஸ்தாபமும், பிரசன்னமும் ஒளியாக அறியப்படுகின்றது. அவர் ஒளியைக் கொடுக்கும் நீதியின் சூரியனாகவும் அறியப்படுகின்றார்.
ஒளியை உண்டாக்கின வரும் அவரே.
ஒளியாய் இருப்பவரும் அவரே.
ஒளியின் தேவனால் உண்டான நன்மைகள் என்ன
குருட்டுத் தன்மை மாறி ஒளி பெறுகிறோம்.
தீமையின் ஆதிக்கம் குறைந்து நன்மை பரிணமிக்கும்.
எல்லாம் வெளியரங்கமாக்கப்படும். அறையிலும் இருதயத்திலும் இருக்கிறவர்கள் வெளிப்படும்.
ஒளிராதவைகளையும் ஒளிர வைக்கும்.
ஒளியில் நடந்தால் இடரி போகமாட்டோம்.
ஒளி யாக்கப்பட்டவைகள் யாவும் ஜக்கியத்துக்குள் வந்து சேரும்.
சில கேள்விகள்….
அவரின் ஒளியினால் இன்னும் ஒளிராத இருதயங்கள், பகுதிகள் இருப்பது ஏன்?.
வெளிச்சம் கொடுக்கும் ஒளி சுட்டெரிக்கும் அக்கினியாய் மாறுவது ஏன்?.
ஒளியாகிய தேவனின் ஒளியை மேற்கொள்ளும் சக்திகள் உண்டா?.
உலகத்தில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9.
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. ஏசாயா60:1.