தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார்.
If God is glorified in Him, God will also glorify Him in Himself, and glorify Him immediately. (John 13:32)
John 17:4-6,21-24; Hebrews 1:2,3; 1Peter 3:22; Revelation 3:21; Revelation 21:22,23; Revelation 22:1,3,13; Isaiah 53:10-12.
தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார். (யோவான் 13:32)
யோவான் 17:4-6,21-24; எபிரெயர் 1:2,3; 1பேதுரு 3:22; வெளி 3:21; வெளி 21:22,23; வெளி 22:1,3,13; ஏசாயா 53:10-12.
நம்மில் தேவன் மகிமைப்படுவதே நமது மகிமைப்படுதலாகும்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது கிரியைகள், பேச்சுகள், வாழ்வியல் முறைகள் யாவற்றிலும் தம்மை அனுப்பியவரும், தமது தந்தையுமாகிய பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்துகிறவராகவே காணப்பட்டார். தனக்கு மகிமையை தேடுவதற்கு பதிலாக பிதாவுக்கு மகிமையைத் தேடுகிறவராக இருந்ததினால்தான் இயேசுகிறிஸ்து நேசகுமாரன் என்று அழைக்கப்பட்டார், மகிமைப்படுத்தப்பட்டார்.
தேவனுடைய மக்களாகிய – ஊழியக்காரர்களாகிய நாம் நமது கிரியைகளிலும், பேச்சிலும், பழக்கவழக்கங்களிலும், வாழ்வியல் முறைகளிலும் பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியும் மகிமைப்படும்படியாய் நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அவரின் மகிமைக்குள் நாம் பிரவேசிக்க முடியும்.
ஒரு குடும்பத்தில் பிள்ளைகளும், மருமக்கள்மார்களும், பேரபிள்ளைகளும் பேச்சிலும் கிரியைகளிலும், பழக்கவழக்கங்களிலும் தந்தையும் தாயும் மகிமைப்படும்படியாய் – பெருமைபடும்படியாய் நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு சபையில் மூப்பர்களும் விசுவாசிகளும் வார்த்தையிலும், கிரியைகளிலும், பழக்கவழக்கங்களிலும், வாழ்க்கைமுறைகளிலும் சபையின் ஊழியர்கள் பெருமைபடும்படியாய் நடந்துக் கொள்ள வேண்டும்.
இதைபோன்றே நாம் பணி செய்கிற இடங்களில், நமது ஆண்டவரை அறியாத உறவுகளின் மத்தியில் கர்த்தராகிய இயேசுவும் தாங்கள் சார்ந்த சபையும் பெருமைபடும்படியாய் நடக்க வேண்டும்.
நமக்கு மேலானவர்கள் எப்பொழுதும் நமக்கு மேலானவர்களே. அவர்கள் வயதாகிப்போனாலும், பலவீனப்பட்டு போனாலும் அவர்கள் மேலானவர்களே. அவர்களுக்குரிய கனம், புகழ், மகிமையை நாம் கொடுத்துதானாக வேண்டும். காண்கின்ற மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாவிட்டால் காணாத தேவனுக்கு மட்டும் எப்படி மகிமைப்படுத்தி மரியாதை கொடுக்க முடியும்?
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதை மறக்க வேண்டும்.
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே. ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள். ரோமர் 13:1-7.